எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் படலம் முடிந்தவுடன் ஆரி மற்றும் சோம்சேகர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் இடையில் நின்று கொண்டிருந்த அனிதா பொங்கி எழுந்தார்

என்னுடைய பேச்சை யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள், நான் எப்பொழுது பேச வந்தாலும் கொஞ்சம் இரு என்று என்னை அடக்கி விடுகிறார்கள். நான் ஒன்றும் சின்ன குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகி விட்டது, நான் பெரிய பொம்பள, என்னைவிட சின்ன பையனாக இருக்கும் பாலாஜி சொல்வதையெல்லாம் கேட்கிறீர்கள். ஆனால் நான் சொல்வதை யாருமே கேட்க மாட்டேன் என்கிறீர்கள். என்னுடைய திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கொடுக்காததால் தான் நான் இந்த வாரம் நாமினேஷன் இடம் பெற்றுள்ளேன். ஒருவேளை என்னுடைய கருத்து கேட்கப்பட்டு இருந்தால் நான் நாமினேஷனில் இருந்திருக்க மாட்டேன்

நான் செய்தி வாசிப்பாளர். உலக அரசியல் எனக்கு தெரியும். என்னுடைய வீட்டில் நான் தான் எல்லா முடிவுகளையும் எடுப்பேன், என்னை பேச விடாமல் செய்வது முறையல்ல என்று அனிதா பொங்கி எழுந்தார். இடையிடையே கண்ணீர் விட்ட அனிதாவிடம், ‘சரி நீ என்ன சொல்ல வருகிறாய், அதை சொல் என ஆரி திரும்பத் திரும்ப கேட்டாலும் திரும்பத் திரும்ப அனிதா ‘என்னை பேச விட மாட்டேன் என்கிறீர்கள் என்று கூறிக்கொண்டு கடைசிவரை அவர் சொல்ல வந்ததை சொல்லவில்லை

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிது செய்யும் அனிதாவின் போக்கு வரவர பார்வையாளர்களுக்கு எரிச்சலை தந்து கொண்டிருப்பது கமெண்ட்டுகளில் இருந்து தெரிய வருகிறது

More News

விஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது சுமார் அரை டஜனுக்கும் மேலான படங்களில் நடித்து வரும் நிலையில் அவற்றில் ஒன்று 'துக்ளக் தர்பார்' என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா? தோனிக்கு குவியும் கண்டனம்

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என தோனி கூறியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 

அரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வைப்பதே அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதும் சண்டை செய்ய வைப்பதும் தான் என்பது தெரிந்ததே

திரையுலகில் அடுத்த அவதாரம் எடுத்த நமீதா! அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகில் சமீபத்தில் நடிகை வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்தார் என்பதும் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தது என்பதும் தெரிந்ததே 

3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி தனது அபார நினைவாற்றல் திறன் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.