இந்த வாரம் ஜெயிலுக்கு போவது யார்? அனிதா-பாலா காரசார விவாதம்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் டாஸ்குகள் விளையாடியதன் அடிப்படையிலும் மற்ற வேலைகளை செய்ததன் அடிப்படையிலும் இரண்டு சிறந்த போட்டியாளர்கள் மற்றும் இரண்டு மோசமான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதேபோல் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட ஒருவரை தேர்ந்தெடுப்பதும் உண்டு

இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் மோசமான போட்டியாளர் தேர்வு செய்யப்படும் காட்சிகள் உள்ளன. அதில் அனிதா பாலாவை நாமினேட் செய்கிறார். அவர் கூறும் காரணம் ’கேபி துவங்கும்போது கேப்டனாக பாலாஜி அதனை கேள்வி கேட்டார் என்றும், ஆனால் ஷிவானி தூங்கும் போது ஒன்றுமே சொல்லவில்லை என்றும் அதனால் போட்டியாளர்களிடையே அவர் பேதம் பார்க்கின்றார் என்றும் கூறுகிறார்

இதற்கு விளக்கம் அளிக்க பாலாஜி முயன்றபோது, ‘நாமினேட் செய்யும் போது எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத் தான் நான் சொல்ல முடியும் என்றும் நாமினேட் செய்யும் போது இடையூறு செய்யக்கூடாது என்றும் நீங்களே சொல்லி விட்டு அந்த விதிகளை நீங்களே மீறலாமா என்றும் பாலாவிடம் அனிதா கேட்கிறார். அனிதா, பாலா இடையே நடந்த இந்த காரசாரமான விவாதத்தை அடுத்து இந்த வாரம் ஜெயிலுக்கு செல்வது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் சிறப்பான மற்றும் மோசமான போட்டியாளர் ஒருவரை தேர்வு செய்யும்போது அந்த வாரத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் அடிக்கடி கூறி வந்தபோதிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மற்றும் ஒரே ஒரு நிகழ்வினை மட்டுமே வைத்து மோசமான போட்டியாளரை மீண்டும் தேர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருந்தாத போட்டியாளர்களை கமல்ஹாசன் வரும் சனிக்கிழமை திருத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சாலையில் சுருண்டு விழுந்த குட்டி யானையை காப்பாற்றிய இளைஞர்… நெகிழ்ச்சி வீடியோ!!!

தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் ஒரு மாத குட்டி யானை ஒன்று நடு ரோட்டிலேயே சுருண்டு விழுந்தது

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: டி.ராஜேந்தர் எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து 'நடப்பு தயாரிப்பாளர் சங்கம்' என பிரிந்தது என்பதும் அந்த சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராக உள்ளார் என்பதும் தெரிந்ததே.

ஜெயம் ரவியின் 'பூமி' ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது திரையங்குகள் திறக்கப்பட்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை

ஊரடங்கால் பண நெருக்கடி, கடன் தொல்லை: ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய இளைஞர்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடன் தொல்லை மற்றும் பண நெருக்கடியில் இருந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு லாட்டரியில் ஏழு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது

எம்ஜிஆர் உயிருடன் வந்துவிட்டாரா? 'தலைவி'யின் ஆச்சரியமான புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.