நாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேசன் படலம் நடந்த நிலையில் அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் திடீரென நாமினேசனில் ஒரு திருப்பம் ஏற்பட்டது

ஏற்கனவே எவிக்சன் பாஸ் என்ற ஒரு அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் அறிவித்தார் என்றும் அந்த பாஸை பெற்ற ஆஜீத் ஒருமுறை பயன்படுத்தி எவிக்சனில் இருந்து தப்பித்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது திடீரென நாமினேஷன் டாப்புள் பாஸ் என்பதை பிக்பாஸ் அறிவித்தார். நாமினேசன் செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவருக்கு இந்த பாஸ் கிடைத்தால் அவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நாமினேட் செய்யலாம் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து இந்த டாபுள் பாஸை பெறுவதற்கு ஏழு பேர்களும் ஆர்வம் கொண்டனர். இருப்பினும் கடைசி கட்டமாக நிஷா, சனம் மற்றும் அனிதா ஆகிய 3 பேர் பிடிவாதமாக இந்த டாப்புள் கார்டை பெறுவதில் இருந்தனர். கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் இருந்த நிஷா ஒரு வழியாக சமாதானமாகியதால் அனிதாவுக்கு டாப்புள் கார்ட் கிடைத்தது

இந்த டாப்புள் கார்டை பயன்படுத்தி சம்யுக்தாவை நாமினேட் செய்வதாக அறிவித்தார் அனிதா. முன்னதாக இந்த பாஸ் கிடைத்தால் யாரை நாமினேட் செய்வோம் என்ற அறிவிப்பில் அனிதா, பாலாஜி, சனம் ஆகிய மூவருமே அர்ச்சனா குரூப்பில் உள்ளவர்களை தான் நாமினேட் செய்வதாக அறிவித்தனர் என்பதும் அதே போல் அனிதாவுக்கு அந்த கார்ட் கிடைத்ததும் அர்ச்சனா குருப்பில் உள்ள சம்யுக்தாவை நாமினேட் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அனிதா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சம்யுக்தா இடம் பெற்றுள்ளார். நாமினேஷன் படலத்தில் நடைபெற்ற இந்த திடீர் திருப்பம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

உருவானது நிவர் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக உருவாகியதால் இன்று நிவர் புயல் உருவாகும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த

நிவர் புயல் எதிரொலி: 7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில் நாளை  மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை?

வங்கக் கடலில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவான நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால்

நெருங்கி வரும் நிவர் புயல்; சென்னை உள்பட 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து நாளை தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்க உள்ளது. குறிப்பாக மாமல்லபுரம் மற்றும் காரைக்கால்

’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல குணசித்திர நடிகர் தவசி அவர்கள் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்