ரியோவை அட்டாக் செய்த அனிதா: இன்னிக்கு தரமான சம்பவம் இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கால் சென்டர் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் நேற்று அர்ச்சனா-ஆஜித், சோம்-கேப்ரில்லா மற்றும் ஆரி-பலஜி ஆகியோர்களின் உரையாடல்களை பார்த்தோம்

இந்த நிலையில் இன்றைய கால் சென்டர் டாஸ்க்கில் அனிதா மற்றும் ரியோ உரையாடல் நடைபெற்று வருகிறது. இதில் ’நீங்கள் தனித்தன்மையுடன் விளையாடுகிறீர்களா? என அனிதா கேட்க அதற்கு ’ஆமாம் நான் தனித்தன்மையுடன் விளையாடுகிறேன்’ என்று ரியோ கூற ’பார்ப்பதற்கு அப்படியே எனக்கு தெரியவில்லை’ என்று இன்று அனிதா கூறியபோது புன் சிரிப்பையே பதிலாக கொடுத்தார் ரியோ

மேலும் ’வெளியே நீங்கள் போடாத ஒரு முகமூடியை இங்கே போட்டுக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்றும் பாதி ரியோவைதான் காட்டுவேன் எனக்கு சாம்பியன் பட்டம் கொடுங்கள் என்று கூறினால் மக்கள் எப்படி கொடுப்பார்கள்? என்று ரியோவிடம் கிடுக்கிப்பிடி கேள்வியை அனிதா முன்வைத்தார்

ஒருவர் உங்களை பற்றி விமர்சனம் செய்ய முன் வந்தால் உடனே அவர்களை உட்கார வைத்து விடுவீர்கள் என்று என்ற குற்றச்சாட்டை அனிதா கூறியதற்கு அந்த குற்றச்சாட்டை நான் மறுக்கின்றேன்’ என்று ரியோ கூறுகின்றார். அதன்பின் ’நான் கேட்கிற கேள்விகளை புரிந்து கொண்டு அதன் பின்னர் நீங்கள் பதில் சொல்லுங்கள்’ என்று அனிதா அட்டாக் செய்ய கொஞ்சம் அப்செட் ஆனார் ரியோ

இந்த உரையாடலுக்கு பின் வெளியே வந்து மிகவும் சோகத்துடன் காணப்பட்ட ரியோ, ‘டாஸ்க் என்பதால் நான் என்னை மிகவும் கண்ட்ரோல் செய்துகொண்டேன்’ என்று தனது அணியினர்களிடம் புலம்புகிறார். மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கு என்றுதான் கூறவேண்டும்