close
Choose your channels

அனிதாவுக்கு இப்படியெல்லாம் கோபம் வருமா? அதிர்ச்சி வீடியோ!

Monday, December 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்படும் ‘மாட்னியா’ என்ற டாஸ்க்கில் ஒரு ஹவுஸ்மேட் இன்னொரு ஹவுஸ்மேட் இடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்றும் அதற்கு இன்னொருவர் பதில் சொல்லவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த டாஸ்க்கில் ஏற்கனவே ஆரி ரம்யாவிடம், பாலாஜி ஆரியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் கூறிய பதில்களையும் இன்றைய இரண்டாவது புரமோவில் பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் ஷிவானி ஆரியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். இந்த வீட்டில் யார் டிமோட்டிவேட் ஆக இருக்கின்றார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று கேட்க, அதற்கு ஆரி, அனிதாவை கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணமாக ‘அனிதா தான் விளையாடுவது குறித்து எங்கள் வீட்டில் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை என்றும், என்னுடைய பிரபா என்ன நினைப்பார் என்று தெரியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது இடைமறித்த அனிதா, ‘ஆரி என்னுடைய அம்மா அப்பா பற்றி பேச வேண்டாம் என்று கூறினார். அப்போது ஆரி, ‘நான் பேசி முடித்தவுடன் நான் என்ன சொல்கிறேன் என்று பொறுமையாக கேட்டு அதன் பிறகு பதில் சொல்லுங்கள் என்று கூற, அதற்கு அனிதா ’அதுவரை எல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, என்னுடைய கணவர் பற்றி, என்னுடைய அப்பா அம்மாவை பற்றி பேசாதீர்கள்’ என்று உரத்த குரலில் கையை நீட்டி ஆவேசமாக கூறுகிறார்

இந்த 78 நாட்களில் அனிதாவிடம் இருந்து இப்படி ஒரு ஆவேசத்தை பார்த்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனிதாவுக்கு இப்படியெல்லாம் கோபம் வருமா? என்று இந்த வீடியோவை பார்த்தவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment