ஏன் தைரியம் இல்லாம போறிங்க: ரியோவை உசுப்பேற்றும் அனிதா!

அர்ச்சனாவின் அன்பு குரூப்பை ஒரே ஒரு வாரம் கேப்டனாக இருந்த அனிதா, சுக்குநூறாய் உடைத்துவிட்டதாக நெட்டிசன்களின் பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில், ஏற்கனவே ரமேஷ், நிஷாவை வெளியேற்றிவிட்ட நிலையில் தற்போது அனிதாவின் அடுத்த டார்கெட் ரியோ மீது திரும்பியுள்ளது.

நாமினேஷனின் போது ரியோ தன்னை பற்றி கூறிய ஒரு கருத்துக்கு அனிதா விளக்கம் கேட்கிறார். நாமினேஷனின்போது கூறியதை என்னிடம் நேரடியாக கேட்டிருக்கலாமே, நாமினேஷனின்போது கேட்டால் நான் பதில் சொல்ல மாட்டேன் என்ற நினைப்பா? என்று கேட்க, நான் உன்னைத்தான் கூறினேன், நேரடியாகத்தான் கூறினேன் என்று ரியோ சமாளித்து அங்கிருந்து விலக முயற்சித்தார்.

அப்போது அனிதா, ‘ஏன் தைரியம் இல்லாமல் போறிங்க’ என உசுப்பேத்த, உடனே சூடான ரியோ, ‘யாருக்கு தைரியம் இல்லை, நான் என்ன வீட்டைவிட்டா வெளியே போயிட்டேன்’ என்று கத்த, அதற்கு அனிதா, ‘ஏன் இப்ப கத்துறீங்க’ என்று அமைதியாக கேட்கிறார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத ரியோ, ‘இனிமே தைரியம் இல்லைன்னு சொல்ர வேலையெல்லாம் வச்சுக்கிடவேண்டாம், பாத்து பேசுங்க’ என்று கூறுகிறார். வழக்கம்போல் இந்த சண்டையை மற்ற ஹவுஸ்மேட்ஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் இனிவரும் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

2,000 அம்மா மினி கிளினிக் திட்டம்… அடுத்தடுத்த திட்டத்தால் அசத்தும் தமிழக முதல்வர்!!!

தமிழகம் முழுவதும் ஒரு மருத்துவர், ஒரு உதவியாளருடன் கூடிய 2,000 மினி கிளினிக்குகள் துவங்கப்படும் என தமிழக முதல்வர்

தங்கை முறை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கொலை: மனைவியும் தற்கொலை!

தங்கை முறை உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் திருமணம் செய்த பெண்ணும் தூக்கில் தொங்கி தற்கொலை

சபிக்கப்பட்ட கிராமம்… பிறந்த பெண்கள் அனைவரும் ஆண்களாக மாறும் விசித்திரம்!!!

விஞ்ஞானிகள் கூட உலக வரைப்படத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை சபிக்கப்பட்ட கிராமமாகவே கருதுகின்றனர்.

கந்துவட்டி கொடுமை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

கந்துவட்டி கொடுமைக்கு எதிராக சட்டம் இருந்தும், கந்துவட்டி கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகின்ற நிலையிலும் ஆங்காங்கே கந்து வட்டி கொடுமை நடந்து வருகிறது

விமான பயணத்தின்போது ரஜினிகாந்த் செய்த சிறப்பான விஷயம்! வைரலாகும் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று முன்தினம் தனது எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்