இந்த வார இரண்டாவது எலிமினேஷன் இவர்தான்: அர்ச்சனாவுக்கு டபுள் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன் என்பதும் இன்று ஒருவர் மற்றும் நாளை ஒருவர் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் இன்று ஜித்தன் ரமேஷ் எவிக்சன் ஆக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இதனை அடுத்து நாளைய எவிக்சன் யாராக இருக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது

இந்த நிலையில் சற்று முன்னர் அது குறித்த தகவல்கள் உள்ளன. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாளை வெளியேறும் போட்டியாளர் நிஷா தான் என்று பிக்பாஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் இருந்த ரமேஷ் மற்றும் நிஷா ஆகிய இருவரும் அடுத்தடுத்து வெளியேறுவது குறிப்பாக நிஷா வெளியேறுவது அர்ச்சனாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்பது மட்டுமின்றி அன்பு குரூப்புக்கும் பேரதிர்ச்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது

அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் இதுவரை 6 பேர் இருந்ததால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவரை டார்கெட் செய்து மோசமான போட்டியாளராகவும், நாமினேஷனில் இருவரை குறிவைத்தும் செயல்பட்டனர். தற்போது அவர்களில் இருவர் குறைந்துவிட்ட நிலையில் இனி ஆட்டம் சூடு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பு குரூப்பில் இருந்து அடுத்தடுத்து இருவர் வெளியேறி இருப்பது கண்டிப்பாக அர்ச்சனாவுக்கு டபுள் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

எவிக்சன் ஆன பிறகு சனம்ஷெட்டியின் முதல் வீடியோ: வைல்ட்கார்ட் எண்ட்ரியா?

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சனம்ஷெட்டி வெளியேற்றப்பட்ட நிலையில் அவரது வெளியேற்றத்தால் பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சனம்ஷெட்டியின் எவிக்சனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து

ரஜினியின் நன்றி டுவீட்டில் மிஸ் ஆன பிரதமர் மோடி பெயர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்

வெளியேறும் ரமேஷை விடைபெற கூட அனுமதிக்காத கமல்: அன்பு குரூப் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படவிருக்கும் நிலையில் அந்த இரண்டு பேரில் ஒருவர் ரமேஷ் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்

அசர வைக்கும் காரணம்… டைம் இதழின் 2020 ஹீரோக்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய அமெரிக்கர்!!!

அமெரிக்காவின் மிக பிரபலமான பத்திரிக்கை டைம் இதழ். இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்களை தேர்வு செய்து அட்டைப் படத்தை நேற்று வெளியிட்டது

தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வா??? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.