பாலா-ஷிவானியை அடுத்து மேலும் ஒரு காதல் ஜோடி: கோர்த்துவிட்ட பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த ரொமான்ஸ் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை தான் என்பதும் வெளியே சென்று விட்டால் புஸ்வானம் ஆகிவிடும் என்று தெரிந்தும் பார்வையாளர்கள் இந்த காதலை ரசித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்னொரு காதல் ஜோடி சேர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இன்று கொடுக்கப்பட்டுள்ள ’பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்க்கில் சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் பாட்டியின் இளைய மகன் மற்றும் இளைய மருமகளாக நடிக்கின்றனர். மேலும் இருவருக்கும் திருடர்கள் கேரக்டர்கள் கொடுக்கப்படுகிறது என்பதும், சோம்-ரம்யாவின் கூட்டாளி அதாவது மகளாக கேப்ரில்லா நடிக்கிறார் என்பதும் இவர்கள் மூவரும் சேர்ந்து வீட்டில் இருக்கும் பாட்டி பத்திரப்படுத்தி வைத்துள்ள சொத்து பத்திரத்தை திருடுவது தான் டாஸ்க் என்று கொடுக்கப்படுகிறது

சோம், ரம்யா, டாஸ்க்கை நிறைவேற்றுவதற்குள் உண்மையிலேயே ஜோடியாகிவிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஒரு பக்கம் பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு காதல் உருவானால் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது