நிஷாவிடம் கண்ணீர் சிந்திய ஆரி கூறியது என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவடையும் தருணம் வந்துவிட்ட நிலையில் இன்று சிறப்பு விருந்தினர்களாக எவிக்ட் ஆன அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் வந்திருந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்றைய சிறப்பு விருந்தினர்களின் வருகை காரணமாக பிக்பாஸ் வீடே குதூகலமும் கொண்டாட்டமாகவும் இருந்தது என்பது மட்டுமின்றி ஒருசில காட்சிகள் நெகிழ்ச்சியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக நிஷாவிடம் ஆரி தனியாக பேசிக் கொண்டிருந்தபோது தன்னை நான்கு முறை போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் நான் கூறிய அறிவுரையை புரிந்து கொள்ளாமல் நான் அவர்கள் மீது பொறாமைப்பட்டு சொல்வதாக தவறாக நினைத்துக் கொண்டார்கள் என்றும் கூறி வருத்தப்பட்டார். அப்போது அவருடைய கண்கள் கலங்கியது என்பதும் அவருக்கு நிஷா ஆறுதல் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘நான் இங்கே இருந்த 70 நாட்களில் நீங்கள் ஒருமுறை கூட பொறாமைப்பட்டத்தை நான் பார்த்ததே இல்லை என்றும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்திருக்கிறார்கள் என்றும் நிஷா ஆரிக்கு ஆறுதல் கூறினார்.
இந்த 98 நாட்களில் மிக அரிதாகவே ஆரி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியுள்ளார் என்பதும், அவற்றில் ஒன்று இன்று நடந்த நிகழ்ச்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
#BiggBossUNSEEN - இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் pic.twitter.com/kC0V1PYl2e
— Vijay Music (@VijayMusicOffl) January 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com