close
Choose your channels

இந்த ஒரு காரணத்திற்காக ஆரிதான் இந்த வார பெஸ்ட் ஃபெர்மார்மர்: வைரல் வீடியோ

Thursday, December 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் பெஸ்ட் ஃபெர்மார்மர் மற்றும் வொர்ஸ்ட் ஃபெர்மார்மர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் சற்று முன் வெளியான அன்சீன் வீடியோ மூலம் இந்த வார பெஸ்ட் பேர்பார்மன்ஸ் ஆரிக்கு தான் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த வாரம் முழுவதும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவரின் உறவினர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே. ஹவுஸ்மேட்ஸின் உறவினர்கள் உள்ளே வரும் போது அனைத்து போட்டியாளர்களுக்கும் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்படும். ஆனால் உள்ளே வரும் உறவினரை பார்த்ததும் சம்பந்தப்பட்ட போட்டியாளர் மட்டும் உணர்ச்சி மயமாகி பிரீஸ் டாஸ்க்கில் இருந்து வெளியேறி உறவினரை கட்டிப்பிடித்து கொஞ்சம் காட்சிகள் நடைபெற்றன

ஆனால் சற்று முன் வெளியான அன்சீன் வீடியோவில் ஆரியின் மகள் வீட்டிற்குள் வரும்போது ஆரி தனது ப்ரீஸ் டாஸ்க்கில் இருந்து வெளியே வராமல் தொடர்கிறார். ஆரியின் குழந்தை அவர் அருகில் வந்து அப்பா என்று அழைத்த போதும் அவர் டாஸ்க்கில் இருந்து வெளியே வரவில்லை என்பதும் பிக்பாஸ் ’ரிலீஸ்’ என்று சொன்ன பிறகுதான் ஆரி தனது மகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

85 நாட்களாக பிரிந்து இருந்த தனது மகள் எதிரே நின்ற போதிலும் அவர் டாஸ்க்கே கண்ணாக இருந்ததை அடுத்து அவர் தான் இந்த வாரம் பெஸ்ட் ஃபெர்மார்மர் என்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment