மறுபடியும் முதலிடம் பிடித்த ஆரி: மற்ற இடங்களில் யார் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே நடந்த கால் செண்டர் டாஸ்க்கின்போது 1 முதல் 13 வரை போட்டியாளர்கள் வரிசைப்படுத்த பிக்பாஸ் கூறியபோது பல்வேறு வாதங்களுக்கு பின் ஆரி முதலிடத்தை பிடித்தார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள பால்&கேட்ச் டாஸ்க்கிலும் அவருக்கே முதலிடம் கிடைத்துள்ளது போல் தெரிகிறது
இன்றைய இரண்டாவது புரமோவில் முதலிடத்திற்காக ஆரி, ரியோ இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் கோபித்து கொண்டு ரியோ எழுந்து சென்றார். அதன் பின் மீண்டும் முதலிடத்திற்கான வாக்குவாதத்தில் ஆரி, ரியோ ஈடுபட்டபோது ‘ஹெல்தியா பேசுங்க, ஏன் இர்ரிடேட்டிங்கா பேசுறிங்க’ என ஆரி கூற அதற்கு ரியோ, ‘நான் ஹெல்தியா தான் பேசிகிட்டு இருக்கேன், நீங்கள் ஹெல்தியா பேசலைங்கிறதை உங்களுக்கு புரிய வைக்கின்றேன்’ என்று ரியோ பதிலளித்தார்.
அதன்பின் ஆரி, ’இரண்டு பெண்கள் விட்டு கொடுத்ததால் தான் நீங்கள் பந்துகளை பிடித்தீர்கள் என்று கூற அதற்கு ரியோ, ‘யாரும் விட்டு கொடுக்கவும் இல்லை, விடவும் இல்லை’ என்று கூற இந்த வாக்குவதாம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் முதலிடத்தில் நின்றிருந்த ரியோ, அந்த இடத்தை விட்டுக்கொடுக்க அந்த இடத்தில் ஆரி நிற்பதுடன் வீடியோ முடிவடைவதால் மீண்டும் ஆரிக்கு முதலிடம் கிடைத்தது போல் தெரிகிறது. அடுத்தடுத்த இடங்களில் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#Promo3 ??#BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/l7z5M1tJA4
— Galatta Official (@galattaofficial) December 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com