அப்போ, இந்த வாரமும் ஆஜித் இல்லையா? அதிர்ச்சியில் பார்வையாளர்கள்!

  • IndiaGlitz, [Monday,December 28 2020]

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஆஜித், ஷிவானி மற்றும் கேப்ரில்லா ஆகிய மூவரில் ஒருவரை வெளியேற்ற பார்வையாளர்கள் தயாராக இருப்பார்கள். ஆனால் அதற்கு முன்னரே ஆரியிடம் மோதி ஒவ்வொரு வாரமும் வலிய வந்து ஒருசில ஹவுஸ்மேட்ஸ்கள் சிக்கி கொள்வதால் அவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஆரிக்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் ஆரியை சீண்டி அவருடன் சண்டை போட்டவர்கள் தான் பார்வையாளர்களின் முதல் டார்கெட்டாக உள்ளது. தாய்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆரி பேசியதாக அபாண்டமாக குற்றம் சாட்டிய சம்யுக்தா, ஆரியுடன் நேருக்கு நேர் மோதிய அர்ச்சனா மற்றும் ஆரியுடன் கோபத்துடன் பேசிய அனிதா ஆகியோர் கடந்த மூன்று வாரங்களாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் தான் ஆஜித் உள்பட மூவரும் தப்பித்து வந்தனர்.

எனவே இந்த வாரமாவது ஆஜித் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் ரம்யா வலியவந்து ஆரி ரசிகர்களிடம் சிக்கி கொள்கிறார். ஒவ்வொரு வாரமும் ஆரியுடன் சண்டை போடுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருவதை புரிந்துகொள்ளாமல் ரம்யா மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் ஆரி குறித்து பேசும் காட்சிகள் இன்றைய புரமோ வீடியோவில் உள்ளதால் ஆரியின் ஆதரவாளர்கள் பார்வை தற்போது ரம்யா மீது திரும்பியுள்ளது

ஆனால் அதே நேரத்தில் ரம்யாவை ரியோ மட்டுமே நாமினேட் செய்துள்ளதாக இதுவரை வந்த வீடியோக்களில் இருந்து தெரிய வருகிறது. ஒருவேளை வேறு யாரேனும் ரம்யாவை நாமினேட் செய்து அவர் நாமினேஷன் பட்டியலில் இருந்தால் ரம்யா தான் இந்த வார ஆரி ரசிகர்களின் டார்கெட் ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

அப்படி என்றால் இந்த வாரமும் ஆஜித் தப்பித்து விடுவாரா என்பதே நடுநிலை பார்வையாளர்களின் அதிர்ச்சியாக உள்ளது