ஃபினாலே டாஸ்க்: சோம் உடன் காரசார விவாதம், தனக்கான இடத்தை வாதாடி பெற்ற ஆரி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இன்று ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் மொத்தம் 5 சுற்றுகள் உள்ளன என்பதும் 5 சுற்றுகளிலும் சேர்ந்து முதலிடத்தை பிடித்தவர் நேரடியாக ஃபினாலேவுக்கு தகுதி செய்யப்படுவார் என்பது மட்டுமின்றி அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்தும் காப்பாற்றப்படுவார் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று வெளியான மூன்று புரமோவில் இருந்து ஒரு டாஸ்க்கில் பாலாஜி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதாக தெரிகிறது. இந்த டாஸ்க்கில் அதிக நேரம் பலூனை கையில் வைத்து தாக்குப்பிடித்தது யார் என்று வரிசைப்படுத்தும்போது சோம் மற்றும் ஆரி இடையே விவாதம் நடைபெற்றது.
5வது இடத்திற்கும் சோம், ஆரி ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்ய, சோம் இடையில் கையை வளைத்ததாகவும், ஆனால் தான் கையை நேராக வைத்திருந்ததாகவும், அதனால் தனக்கே ஐந்தாம் இடம் வேண்டும் என்றும் ஆரி வாதாடினார். ஒரு கட்டத்தில் சோம் இதனை ஒப்புக்கொண்டாலும் ரியோ ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் வாக்குவாதம் தொடர்ந்தது.
கடைசியில் ஒரு வழியாக ஆரி வாதாடி தனக்கான ஐந்தாவது இடத்தை பிடித்துவிட்டார். சோம்க்கு நான்காவது இடமே கிடைத்தது. இந்த டாஸ்க்கில் அதிக நேரம் தாக்குப்பிடித்த வகையில் பாலாஜிக்கு 7வது இடமும் அதனையடுத்து ரியோ, ஆரி, சோம், ரம்யா, கேபி மற்றும் ஷிவானி கடைசி இடத்திலும் உள்ளனர்.
ஒட்டுமொத்த டாஸ்க்கும் முடிந்தபின்னர் தான் ஃபினாலேவுக்கு நேரடியாக தகுதி பெறுபவர் யார் என்பது தெரியவரும்.
#BiggBossUNSEEN - இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் pic.twitter.com/JcyLwmdxG0
— Vijay Music (@VijayMusicOffl) January 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments