முதலிடத்தை பிடிப்பது யார்? ஆரி, ரியோ மீண்டும் மோதல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் பால்&கேட்ச் டாஸ்க்கில் சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளனர் என்றும் இந்த டாஸ்க் இன்றும் தொடர்ந்து வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் சோம் அணியினர் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் நன்றாக விளையாடியவர்கள் யார் என்பது குறித்து ஒவ்வொருவரின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பு மற்றும் போட்டியிடும் தன்மையை மனதில் கொண்டு உங்களை நீங்களே வரிசைப் படுத்திக் கொண்டு அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார் இதனை அடுத்து 1 முதல் 9 வரை வரிசைப்படுத்தி உள்ள ரேங்கிங் பட்டியல் அருகே அனைத்து போட்டியாளர்களும் வந்து வாதாடுகின்றனர். இதற்கு முன்னர் ஏற்கனவே இதே போன்ற பட்டியல் குறித்த டாஸ்க் வந்தபோது பல பிரச்சனைகள் வந்தது என்பது அனிதா அந்த ரேங்க் வரிசையில் நிற்க முடியாது என்று வெளிநடப்பு செய்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்றைய ரேங்கிங் பிரிக்கும் போது ஆரி மற்றும் ரியோ கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஒருமுறை சொன்னதை நீங்கள் திரும்பவும் சொல்ல மாட்டீர்களா? என்று ஆரி கேட்க அதற்கு ரியோ, ‘நான் 100% எனது பங்களிப்பை கொடுத்துள்ளேன் என்று கூறி, ‘இதுக்கு பேர் தான் கார்னர்’ என்று கோபத்துடன் எழுந்து செல்கிறார். இருவரும் முதல் இடத்திற்கு போட்டி போடுவது போல் தெரிவதால் இன்றைய நிகழ்ச்சியில் ஒரு தரமான சம்பவம் காத்திருக்கின்றது என்று தெரிகிறது
முன்னதாக ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற பாடல் ஒலித்தவுடன் அவசர அவசரமாக ஹவுஸ்மேட்ஸ் எழுந்து பந்துகளை பிடிக்க ஓடுகின்றனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது
#Day80 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/zNjJbG1JGL
— Vijay Television (@vijaytelevision) December 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout