உனக்காவது ஷிவானி இருக்கா? எனக்கு யார் இருக்கா? பாலாஜியிடம் புலம்பிய ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக அர்ச்சனாவின் அன்பு குரூப்பை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சுசித்ரா, சம்யுக்தா மற்றும் சனம் ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெளியேறியது இதனை உறுதி செய்து போல் உள்ளது. மேலும் அன்பு குரூப்பில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த உண்மை தற்போது தான் ஆரிக்கு புரிந்துள்ளது. அன்பு குரூப்பில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பாக விளையாடி வருவதாக இன்று காலை வெளியான முதல் புரமோவில் ஆரி புலம்பினார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் ஆரி மற்றும் பாலாஜி உரையாடுகின்றனர். ‘நான் உனக்கு சொல்லும் அட்வைஸ் என்ன வென்றால் உனக்கு ஷிவானி மேல் அன்பு இருக்கிறது. ஓகே ஆனால் அந்த அன்பால் கேம் கேட்டுவிடக்கூடாது. ஆனால் கேமை ஒழுங்காக விளையாடாமல் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு செலுத்தி விளையாடுகிறார்கள் என்று அர்ச்சனா குரூப்பை கூறினார்

இதற்கு பாலாஜி கூறிய போது ’உங்களுக்கும் எனக்கும் ஒரு லெவலுக்கு மேல் பேச ஆள் இருக்காது. அதன் பிறகு தனியாக புலம்ப வேண்டியதுதான் என்று கூறினார். இதனை அடுத்து ஆரி, ‘உனக்காவது ஷிவானி இருக்கா, எனக்கு யார் இருக்காங்க? என்று கூறியபோது கவலைப்படாதீர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் ஷிவானியையும் பேக் பண்ணி அனுப்பி விடுவார்கள் என்று என்று கூறி இருவரும் கட்டி அணைத்துக் கொண்டனர்

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தனியாக அமர்ந்து ஷிவானி வழக்கம்போல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அர்ச்சனாவின் அன்பு குரூப்புக்கு எதிராக ஆரி, பாலாஜி இருவரும் ஒன்று சேர்ந்தால் விளையாடினால் பிக்பாஸ் ஆட்டம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

நாளை நாடு தழுவிய போராட்டம்… தமிழகத்தில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா???

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் கடும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இதைவிட எனக்கு வேற என்ன வேணும்: வெளியேறிய பின் சனம்ஷெட்டியின் நெகிழ்ச்சியான டுவீட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சனம்ஷெட்டி வெளியேற்றப்பட்டதை பல பிக்பாஸ் ரசிகர்கள் இன்னும் ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனம்

ஓடிடியில் 'மாஸ்டர்' படம் வெளியிட முடிவு செய்தால்..... அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி

நான் சங்கியா...? கமல்ஹாசன் ஆவேசம்

சமீபத்தில் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிவி சீரியல் நடிகை உயிரிழப்பு: அதிர்ச்சியில் சின்னத்திரை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டிவி சீரியல் நடிகை ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்ததை அடுத்து சின்னத் திரை உலகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது