'டிப்'புன்னு என் வாயை தான் அடைச்சிட்டாங்களே: ஆஜித் குடும்பத்தினரிடம் புலம்பிய ஆரி!

பிக்பாஸ் வீட்டிற்கு ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் வெளியான அடுத்த புரமோவில் ஆஜித்தின் குடும்பத்தினர் வருகின்றனர்

’ஆராரிராரோ என்ற பாடலின் பின்னணியில் ஆஜித்தின் குடும்பத்தினரின் வருகை ஆஜித்துக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்திருக்கும். ‘இங்கே வந்து இத்தனை நாள் ஆகிவிட்டது, இன்னும் பேசவே மாட்டேன் என்கிறான் என்று ஆஜித்தின் தாயார் புலம்புகிறார். அதன்பின்னர் ஆஜித்தின் சகோதரி பாலாவிடம் ’நீங்கள் நன்றாக பேசுவீர்களே’ என்று கூறும்போது ’நான் பேசவே மாட்டேன், ரொம்ப கொயட்’ என்று கூற ’நீங்களா’ என்று கேலியுடன் சிரிக்கின்றார்

மேலும் ஆஜித் தான் இருப்பதிலேயே வயது குறைந்தவன். ஒவ்வொரு முறையும் ஆஜித் நாமினேட் ஆகும்போது அவனுக்கு ஒரு க்ளியர் பிக்சரா யாருமே சொல்லலையோ என்று தோணுகிறது என்று ஆஜித்தின் சகோதரி கூறும்போது, அதற்கு ஆரி ’என் வாயை தான் எல்லாரும் சேர்ந்து அடைச்சிட்டிங்களே, ஆஜித்திடம் ஒரே ஒருமுறை தான் பேசினேன். அப்போது எல்லாரும் சேர்ந்து ‘டிப்’புன்னு என் வாயை அடைச்சிட்டாங்க’ என்று கூறியவுடன் ‘அதுவும் சரிதான்’ என்று ஆஜித் சகோதரி ஒப்புக்கொண்டார். பின்னர் கடைசி வரைக்கும் அவனுக்கு அது புரியவே இல்லை’ என்று கூறுவதுடன் இன்றைய இரண்டாம் புரமோ முடிவுக்கு வருகிறது

More News

2021 இல் குறிக்கோளே இதுதான்… பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏமன் விமான நிலையத்தில் தாக்குதல்… பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இருந்தபோது பயங்கரம்!!!

ஏமன் நாட்டின் விமான நிலையம் ஒன்றில் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.

சிம்பு, மகத் லேட்டஸ் ஆன்மீக வீடியோ: இணையத்தில் வைரல்!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும், அவர் நடித்து வரும் 'மாநாடு' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பிறந்த நாளில் ப்ரியா பவானிசங்கருக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

லீக் ஆன 'வலிமை' ஸ்டில்: அஜித்தின் அம்மா வேடத்தில் இவரா?

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில்