ஆஜித், ஷிவானியே கலாய்ச்சிட்டாங்களே! அனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியவிருக்கும் நிலையில் ஷிவானி கூட ஓரளவுக்கு பேச ஆரம்பித்துவிட்டார். பேச ஆரம்பித்து விட்டார் என்று சொல்வதைவிட ரொமான்ஸ் செய்யவும் ஆரம்பித்து விட்டார் என்பதே சரியானது. ஆனால் ஆஜித் இன்னும் ஆரம்பம் முதலே அமைதியாகவே உள்ளார்

இந்த நிலையில் நேற்று ’நீங்கள் யார் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்று கூறுங்கள்’ என பிக்பாஸ் ஒரு டாஸ்க் வைத்தார். இந்த டாஸ்க்கில் பலர் தங்கள் அம்மாவைவும் ஒருசிலர் தனது மனைவியையும் குழந்தையையும் மிஸ் செய்வதாக கூறி வந்தனர். ஒவ்வொருவரும் கூறும் கதையை கேட்டு மற்ற போட்டியாளர்கள் கண் கலங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனிதாவின் முறை வந்தது. வழக்கம்போல் அனிதா மூச்சுவிடாமல் செய்தி வாசிப்பது போல் தான் யார் யாரை மிஸ் செய்கிறேன் என்று சொல்லி கொண்டே இருந்தார். பெரும்பாலும் தன்னுடைய கணவரையும் அம்மாவையும் தான் மிஸ் செய்வதாகவும், தன்னுடைய கணவர் தனக்காக எதுவும் செய்வார் என்றும் என்னை ’கன்னுக்குட்டி’ என்றுதான் கூப்பிடுவார் என்றும் கூறிக் கொண்டே இருந்தார்

ஒரு கட்டத்தில் அவர் என்ன டாஸ்க் என்பதையே மறந்து வேறு எதையெல்லாமோ பேசிக்கொண்டிருந்தது போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ஆஜித் கூட தனக்கு அருகில் உட்கார்ந்திருந்த ரம்யாவிடம் ‘இந்த டாஸ்க் பெயர் என்ன என்று கூறி கலாய்க்க, ரம்யா சிரிப்பை அடக்க முடியாமல் அவஸ்தைப்பட்டது பெரும் நகைச்சுவையாக இருந்தது

அதே போல் பாலாஜியிடம் ஷிவானி அனிதாவின் பேச்சை கிண்டல் செய்ய அதற்கு அவரும் சேர்ந்து கிண்டலடித்தார். ஆஜித், ஷிவானி கூட கிண்டல் செய்யும் அளவிற்கு அனிதாவின் நிலைமை இப்படி ஆயிடுச்சே என்று நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சம்யுக்தா, ‘அனிதா போதும், ரொம்ப லாங்கா இருக்கு என்று கூறியதை அடுத்தே அனிதா தனது பேச்சை நிறுத்தினார். அதுமட்டுமின்றி நீங்கள் எப்படி அவ்வாறு கூறலாம் என்று சம்யுக்தாவிடமும் வாக்குவாதம் செய்து மீண்டும் எனக்கு ஸ்பேஸே கொடுக்க மாட்டேங்குறிங்க’ என்று புலம்ப ஆரம்பித்தார். இதனால் தான் இன்று அவர் மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.