அவன் எல்லாம் ஒரு ஆளு: அர்ச்சனாவுக்கு ஒரு குறும்படம் உண்டா கமல் சார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் தொடங்கிய புதிய மனிதா என்ற டாஸ்க்கில் தனது அப்பா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறி தன்னை மனவருத்தம் செய்துவிட்டதாக நிஷா மீது குற்றஞ்சாட்டி அர்ச்சனா பெரிய களேபேரத்தை நடத்தினர். இதனை அடுத்து அன்பு குரூப் உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென மீண்டும் அர்ச்சனாவும் நிஷாவும் தற்போது இணைந்து கொண்டனர். நிஷா கூறியதை தான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தவறாக எடுத்துக் கொண்டால் தானே மன்னிப்பு என்றும் அர்ச்சனா கூறியது பெரும் ஆச்சரியம். தவறாக எடுத்து கொள்ளாத ஒரு விஷயத்திற்காக அர்ச்சனா ஏன் இவ்வளவு பெரிய ஒரு ஆர்ப்பாட்டம் செய்தார் என்பதுதான் தற்போது பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது.
மேலும் தான் தவறு செய்துவிட்டோம் என்று அழுது கொண்டிருக்கும் நிஷாவிடம், ”அழ வேண்டாம் அதுவும் அந்த ’முறை மவன்’ முன்னாடி அழவேண்டாம், அவன் எல்லாம் ஒரு ஆளு’ என்று அர்ச்சனா சக போட்டியாளர் ஒருவரை ஒருமையில் பேசி இருப்பதும் அநாகரீகத்தின் உச்சகட்டமாகக் கருதப்படுகிறது.
இதேபோல் பேசிய சம்யுக்தாவுக்கு குறும்படம் போட்டு அவருடைய தவறை எடுத்துக் காட்டிய கமல்ஹாசன், தற்போது அர்ச்சனாவுக்கு பாடம் புகட்ட ஒரு குறும்படம் போட வேண்டும் என்று பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை கமல்ஹாசன் வரும் சனி ஞாயிறு தினங்களில் பூர்த்தி செய்வாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Padmashree Dr.@ikamalhaasan sir here so many of them accepted yu as a leader not only as a actor . Hope yu interfere in this prblm @ this weekend. How #Archana
— DR.SID® (@sai_siddarth13) December 10, 2020
can use those words? If this was done by a man to a women
No one leave this as a small prblm
pic.twitter.com/r258ys0pG2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com