பாலாஜி பாணியிலேயே பாலாஜியை வெறுப்பேற்றிய ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியின் கேரக்டர் ஒட்டுமொத்த முரண்பாடாக உள்ளதை பலமுறை பார்த்துவிட்டோம். திடீரென ஆத்திரத்தில் பொங்கி எழுவார், திடீரென நக்கலாக எதிராளியை குத்தி காட்டுவார், திடீரென காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார், அடுத்த நிமிடமே அவரிடமே சண்டை போடுவார், திடீரென எதிராளிக்கே ஆதரவாக பேசுவார். அவரது உண்மையான கேரக்டர் என்ன என்பதை 50 நாட்கள் முடிந்த பின்னரும் சக போட்டியாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி புரிந்து கொள்ள முடியவில்லை

ஷிவானி ஒருவரிடம் மட்டும் தான் பாலாஜி இன்னும் தனது ஒரிஜினல் முகத்தை காட்டவில்லை என தெரிகிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ஷிவானியிடமும் பாலாஜி தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார். நேற்றே பாத்ரூம் அருகே இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென ஷிவானி சொன்னதை புரிந்து கொள்ளாமல் ஒரு வார்த்தையை விட பின்னர் ஷிவானி அதனை சுட்டிக்காண்பித்த பிறகு, சாரி கேட்டார்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோவில் ஷிவானியும் பாலாஜியும் நேருக்கு நேர் முகத்தை பார்த்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென பாலாஜி நகர்ந்து செல்கிறார். பாலாஜியின் ஸ்டெட்டர்ஜியில் இதுவும் ஒன்று. தன்னிடம் பேசி கொண்டிருப்பவரை வெறுப்பேற்ற, அவர் பேசி கொண்டிருக்கும்போதே நகர்ந்து செல்வது. இதைத்தான் ஷிவானியிடமும் செய்தார். இதனால் கடுப்பான ஷிவானி, ‘நான் பேசிக்கொண்டிருக்கும் போதே நகர்ந்து சென்றால் என்ன அர்த்தம்’ என்று கூறி ‘நீங்கள் பேசி கொண்டிருக்கும்போது நான் அதே மாதிரி சென்றால் எப்படி இருக்கும் என்று பாலாஜி பாணியிலேயே செய்து காட்டினார். இதனால் பாலாஜி வெறுப்பானார். பாலாஜி பாணியிலேயே பாலாஜியை ஷிவானி வெறுப்பேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


 

More News

இந்த வாரம் பாலாஜிக்கு குறும்படம் உண்டா? கமலிடம் எதிர்பார்க்கும் பார்வையாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் வாக்குவாதங்கள் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு வாக்குவாதத்தில் பாலாவை போட்டியாளர்கள்

சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம்: பிரபல நடிகரின் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் சென்னை கடலில் தெரிந்த மூவர்ணம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் தேர்வு!!!

உலகின் மிகப்பெரிய சினிமா விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாகப் போட்டியிடப் போகும் திரைப்படத்தைக் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது

ஒரே ராக்கெட்டில் 60 செயற்கைக்கோள்… விண்வெளியில் புது புரட்சி!!!

ஒரு காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது பெரும் மலைப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரஷ்யா,

நிவர் புயலை எதிர்க்கொண்ட தானைத் தலைவன்… முதல்வருக்கு குவியும் பாராட்டுகள்!!!

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் குறைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது