பிக்பாஸ் நாமினேஷனில் திடீர் திருப்பம்: அர்ச்சனாவுக்கு ஆப்பு வைத்த பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாமினேஷன் படலத்தில் அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக நாமினேஷனை மாற்றி அமைக்கும் சக்தி கொண்ட நாமினேஷன் புரோசஸ் கார்ட் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த நாமினேஷன் கார்டை பெற ஏழு பேர்களும் போட்டி போட்ட நிலையில் கடைசியில் சனம் நிஷா மற்றும் பாலாஜி ஆகிய மூவருக்கும் இடையே போட்டி வருகிறது. இதில் நிஷாவும் சனமும் விட்டுக்கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக உள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த திருப்பமாக நாமினேஷனில் சிக்கிய நபர்கள் தனக்கு பதிலாக நாமினேட் ஆகாத ஒருவரை நாமினேஷன் செய்யலாம் என பிக்பாஸ் அறிவிக்க, நிஷா ஆஜித்தையும், பாலாஜி அர்ச்சனாவையும் நாமினேட் செய்கின்றனர். இதுவரை பாசவலை வீசி குருப்பிஸம் காரணமாக கடந்த சில வாரங்களாக நாமினேஷன் ஆகாமல் தப்பித்து வந்த அர்ச்சனாவுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பாலாஜி அவரை நாமினேஷன் செய்திருப்பது உண்மையில் பெரும் திருப்பம்தான். இந்த வாரம் நாமினேஷனில் அர்ச்சனா சிக்கினால் அவரை வெளியேற்ற நெட்டிசன்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

பணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை ப்ரியா ஆனந்த் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். பிளாக் காமெடி வெப்சீரிஸ் ஆக உருவாகி வரும்

ஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சுசித்ரா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் போஸ்ட்டாக விநாயகர்

சூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித்? வைரலாகும் புகைப்படம்!

நடிகர் சூர்யா கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் நடித்த 'நேருக்கு நேர்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். கடந்த 23 ஆண்டுகளில் அவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

பிக்பாஸ் பாலாஜி மீது பாயும் ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருபவர் பாலாஜி. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே அழகிப் போட்டி நிறுவனம்

தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் எப்படி இருக்கும்??? இந்திய வானிலையின் விரிவான அறிக்கை!!!

வங்காள விரிகுடா பகுதியில் உள்ள தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்துக்குள் அது குறைந்த அழுத்தமாகவும்