காலத்தை கணிப்பது யார்? 45 மணி நேர விறுவிறுப்பான டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 44 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 45வது நாள் என்பதால் 45 மணி நேர டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது

இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்குகளில் ஒரு சில டாஸ்குகள் நன்றாக இருந்தாலும் பெரும்பாலான டாஸ்குகள் மொக்கையாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்

இந்த நிலையில் இன்று கொடுக்கப்பட்டிருக்கும் 45 மணி நேர டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 45 மணி நேரம் நடைபெறும் இந்த டாஸ்கில், நேரத்தை சரியாக கணிக்க போட்டியாளர்கள் போராட வேண்டிய நிலை ஏற்படும்

தண்ணீர் மற்றும் கேஸ் குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்தப்படும் என்ற நிலையில் எல்லா வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். அது மட்டுமின்றி துல்லியமாக நேரத்தைக் கணித்து பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் அடுத்தடுத்த பணிகளையும் செய்ய வேண்டும்

இந்த டாஸ்க்கை சரியாக கணித்து காலத்தை வெல்ல போவது யார் என்பது முடிவில்தான் தெரியும். அர்ச்சனா, சோம், நிஷா சமையலில் சுறுசுறுப்பாக இருக்க, ரம்யா உள்பட ஒருசில போட்டியாளர்கள் இடுப்பில் குடத்தை வைத்து தண்ணீர் சேகரிக்க, பாலாஜி டீ காப்பி சுண்டல் சப்ளை செய்ய என அனைவரும் சுறுசுறுப்பாக டாஸ்க்கில் ஈடுபடுவதை பார்க்கும்போது இன்று நிகழ்ச்சியை சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது