இந்த வார நாமினேஷனில் சிக்கிய 11 பேர்: தப்பிய ஐவர் யார் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த நாமினேஷனில் சிக்கியவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வார இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே
அந்தவகையில் நேற்று நான்கு மணி நேரம் ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்ற போதிலும் அதில் நாமினேஷன் படலமும் நடந்தது. இந்த நாமினேஷனில் மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களில் 11 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். 5 பேர்கள் மட்டுமே நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளனர் என்பதும் அதில் கேப்டன் அர்ச்சனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
நாமினேஷன் சிக்கியவர் 11 பேர்கள்: சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன்.
இந்த வார நாமினேஷனில் சிக்காதவர்கள் அர்ச்சனா, சம்யுக்தா, ஆரி, கேப்ரில்லா, ஷ்வானி
ஆஜித், அனிதா, வேல்முருகன், சனம்ஷெட்டி ஆகிய நால்வரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் 11 பேர் நாமினேஷனில் உள்ளதால் ஓட்டுக்கள் பிரியும் என்பதால் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசமே இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் இந்த வாரம் பாடகி சுசித்ரா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைய வாய்ப்பு உள்ளதால் பாடகர்களான ஆஜித் அல்லது வேல்முருகன் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் வெளியேறுவது யாராக இருக்கும் என்பதை கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments