சேரனுக்கு குவிந்த பெண்கள் ஆதரவு: திருந்தாத மீரா

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் மீது மீரா சுமத்திய இடுப்பு குற்றச்சாட்டு பொய் என்பது குறும்படம் மூலம் அனைவருக்கும் தெளிவாகியது. இந்த குறும்படம் வெளிவந்த பின்னர் கமல்ஹாசன் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் சேரன் குற்றமற்றவர் என்றும், அவர் மீது அபாண்டமாகவே மீரா பழி சுமத்தி உள்ளார் என்பதையும் புரிந்து கொண்டனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் சேரனுக்கு பெரும் ஆதரவு கொடுத்தனர். இதுகுறித்து பெண் போட்டியாளர்கள் கூறியதை தற்போது பார்ப்போம்

சாக்சி: இந்த வீடியோவை பார்க்கும்போது சேரன் மீது எந்தவித தவறும் இல்லை என்பது புரிய வருகிறது. மேலும் சேரன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாள் முதல் இன்றுவரை அவரை பெண் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு தந்தையைப் போல் தான் பார்த்து வருகின்றனர். அவர் எந்த ஒரு நேரத்திலும் தவறான நோக்கத்தில் பெண்களை அணுகியது இல்லை. மீரா வேண்டுமென்றே முதல் நாளிலிருந்தே சேரன் மீது வீண் பழி சுமத்துவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார்

மதுமிதா: ஒரு குறும்படம் மீராவுக்கு சாதகமாக இருந்ததால் எல்லாம் குறும்படமும் அவருக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் நினைத்துக் கொண்டதால் ஏற்பட்டதன் விளைவே இது

லாஸ்லியா: இங்கு வந்த நாள் முதல் சேரன் என்னை கட்டிப்பிடித்த பின்னர் தான் தூங்குவார். அந்த கட்டிப்பிடியில் ஒரு தந்தையின் உணர்வு இருக்கும். ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருக்கும் அவரைப் போய் தப்பாக கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை

அபிராமி: சேரன் ஒருவேளை தவறான நோக்கத்தில் தள்ளி விட்டிருந்தால் உடனே மீராவின் முகம் மாறியிருக்கும். ஆனால் அந்த நிகழ்வுக்கு பின்னரும் மீரா ஜாலியாகத்தான் விளையாட்டை தொடர்ந்தார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து திடீரென யோசித்து சேரன் மீது அவர் குற்றஞ்சாட்டியதன் பின்னணி என்னவென்றே எனக்கு புரியவில்லை'