பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறாரா கஸ்தூரி: அவரே கொடுத்த விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் சமீபத்தில் தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய நான்கு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் விலகிவிட்டால் 11 போட்டியாளர் மட்டுமே இருப்பார். எனவே இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வைல்டு கார்டு மூலம் ஒரு போட்டியாளர் எண்ட்ரி ஆவார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது
வைல்ட் கார்ட் போட்டியாளராக ஆல்யா மானஸா, பவர் ஸ்டார் சீனிவாச, கஸ்தூரி உள்பட ஒருசிலர் பரிசீலனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு செல்வது உறுதி என்றும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் ஒரு சிலர் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். கஸ்தூரி ஏற்கனவே தான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை என்று பலமுறை கூறி விட்ட போதிலும் இந்த வதந்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.
இந்த நிலையில் சற்று முன் இது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியதாவது: போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு.... அதே மாதிரி கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. எவ்வளவுதான் மறுக்கமுடியும் ? இதுக்கு விதம் விதமா 'ஆதாரம்' வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்.
இந்த விளக்கத்திலிருந்து கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அப்படி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரி யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு.... அதே மாதிரி கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. எவ்வளவுதான் மறுக்கமுடியும் ? இதுக்கு விதம் விதமா 'ஆதாரம்' வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்.
— Kasturi Shankar (@KasthuriShankar) August 1, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com