சரவணனை மறந்த ஹவுஸ்மேட்ஸ்: கமல்ஹாசனாவது விளக்குவாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஞாயிறு அன்று ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் திங்களன்று திடீரென சரவணன் வெளியேற்றப்பட்டார். இரண்டு வாரத்திற்கு முன் தனது கல்லூரி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கூறியதற்காக அவர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சரவணன் வெளியேற்றப்பட்டதும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் கதறி அழுதனர். சாண்டி, கவின் தவிர மற்றவர்களின் அழுகை செயற்கைத்தனமாக இருந்த நிலையில் சரவணன் வெளியேற்றம் குறித்து கமல்ஹாசனிடம் நியாயம் கேட்க வேண்டும் என்றும் ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று வெளியான மூன்று புரமோ வீடியோவிலும் யாரும் கமல்ஹாசனிடம் சரவணன் வெளியேற்றம் குறித்து கேள்வி கேட்டதாக தெரியவில்லை. சரவணன் வெளியேற்றப்பட்டதில் கமல்ஹாசனின் பங்கும் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் கமல்ஹாசனாவது இன்று சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான உண்மையான காரணத்தை விளக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments