சாக்சி வெளியேறாதது ஏன்? ரேஷ்மாவிடம் விளக்கிய கமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கவின், லாஸ்லியா மட்டுமன்றி ஒட்டுமொத்த போட்டியாளர்கள் அனைவரையும் வெறுப்பேற்றிய சாக்சி கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு பார்வையாளர்களிடமிருந்து மிகக் குறைவான வாக்குகளே கிடைத்ததாகவும் செய்திகள் வெளிவந்ததால் நேற்று நேற்று சாக்சி வெளியேறுவார் என்று பலர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாட்சிக்கு பதிலாக நேற்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.
ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் நம்பவில்லை. முதல் முறையாக நாமினேஷன் சிக்கிய ரேஷ்மா வெளியேற்றப்பட்டது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மாவுடன் கமல்ஹாசன் இது குறித்து விளக்கம் அளித்தார்.
பிக்பாஸ் மூன்று சீசன்களில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெளியேறுவது ரேஷ்மா தான் என்றும் ரேஷ்மாவிற்கு ஒரு கோடியே 30 லட்சம் வாக்குகள் கிடைத்ததாகவும், அவருக்கு அடுத்தபடியாக இருந்த போட்டியாளருக்கு ஒரு கோடியே 32 லட்சம் வாக்குகள் கிடைத்ததாகவும் கூறினார். ரேஷ்மாவுக்கு அடுத்தபடியாக உள்ள போட்டியாளர் சாக்சி தான் என்று கணிக்கப்படுகிறது.
மொத்தத்தில் வெறும் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரேஷ்மா வெளியேற்றப்பட்டதாக கமல்ஹாசன் கூறினாலும் பார்வையாளர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. இன்னும் ஒரு சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் சாக்சி இருந்தால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாகவும், சண்டை சச்சரவாகவும் இருக்கும் என்பதை பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் நினைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments