மதுமிதாவின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன? வெளிவராத தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா இன்று திடீரென வெளியேற்றப்பட்டதும் அவரது கையில் இருந்த காயம் அவர் ஏதோ ஒரு விபரீத முடிவை எடுத்திருப்பதையும் குறிப்பதாக சற்றுமுன் பார்த்தோம். இந்த விபரீத முடிவை மதுமிதா எடுக்க என்ன காரணம்?
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் சம்பந்தம் இல்லாமல் பேசினாலும் மதுமிதா என்றுமே எல்லை மீறியதில்லை. மனதிற்கு தோன்றியதை படபடவென கொட்டிவிடும் நிலையில் தான் இருந்தார். இந்த நிலையில் வனிதாவின் வரவிற்கு பின் மதுமிதாவிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. வனிதாவின் தூண்டுதலினால் கவின் உள்பட ஐவர் குழுவினர்களிடம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த மதுமிதா, நான்கு பெண்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்களே அமைதியாக இருந்த நிலையில் மதுமிதா மீண்டும் மீண்டும் முடிந்த விஷயத்தை தூண்டிவிட்டார். இதனால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள் மதுமிதாவை கண்டித்தனர்.
இந்த நிலையில் ஹலோ செயலி டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த ஒரு கருத்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய இருந்ததாகவும் இதன் காரணமாக மதுமிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும், இதனையடுத்து உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலை முயற்சி என்ற விபரீத முடிவை எடுத்ததால் அவர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments