இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் நேற்று வனிதா வெளியேற்றப்பட்டதை அடுத்து தற்போது சேரன், கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின், முகின், லாஸ்லியா ஆகிய 7 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்படும் பல்வேறு டாஸ்குகளில் முதலில் வருபவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார் என்று பிக்பாஸ் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து ஏழு பேரும் போட்டி போட்டுக்கொண்டு டாஸ்குகளை செய்து வருகின்றனர். குறிப்பாக சாண்டி, சேரன், தர்ஷன், முகின் ஆகியோர் டாஸ்க்கில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்ர் என தெரிகிறது. எனக்கு இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வேண்டும் என்று சேரன் வெளிப்படையாக கூறியுள்ளதால் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார் என்பது தெரியவருகிறது. மேலும் கவினை பார்த்து சாண்டி, ‘அவன் கேமை கரெக்டா ஆட ஆரம்பிச்சிட்டான், இனி போட்டி அப்படியே மாறும்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து 80 நாளில் எனக்கு புரியாதது இன்றைக்கு மட்டும் என்ன புரியப் போகிறது? என்று சலிப்புடன் கவின் பேச அதற்கு சேரன் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை பெறுபவர் யாராக இருக்கும் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.

More News

தர்ஷ் மச்சான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்: பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவர் தர்ஷன். கடும் போட்டியாளராக ஆரம்பத்தில் இருப்பவர் இவர்தான். எத்தனை முறை எவிக்சன் பட்டியலி

அடுத்தடுத்து வெளியேறுவது யார்? கமல் கேள்வியால் போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்சன் படலம் நடைபெற இருக்கும் நிலையில் கமல்ஹாசன் எவிக்சன் பட்டியலில் உள்ளவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்

சூர்யாவின் 'காப்பான்' ரன்னிங் டைம்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும்

நயன்தாராவுக்காக ரஜினியிடம் அனுமதி பெற்ற விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனமான 'ரெளடி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருக்கும் திரைப்படத்தில்

'பேனர்' வைப்பதற்கு பதிலாக இதை செய்யுங்கள்! நடிகர் சூர்யா வலியுறுத்தல்

சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் பரிதாபமாக பலியானார்.