தலைவர் பதவியை பிடிக்க தரையில் உருளும் போட்டியாளர்கள்

ஒவ்வொரு வாரமும் கேப்டன் பதவியை பிடிக்க ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் கேப்டன் போட்டியில் பங்கேற்க கவின், முகின், சாண்டி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்

இவர்கள் மூவருக்கும் ஒரு கடுமையான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. உடல் முழுவதும் டேப் ஒட்டப்பட்டு மூவரும் கீழே உருட்டப்படுவர். உருண்டு கொண்டே கீழே இருக்கும் சிவப்பு கட்டத்திற்கு வந்து அதன் பின் எழுந்து நிற்க வேண்டும். கையிரண்டையும் சேர்த்து ஒட்டப்பட்டுவிட்டதால் கால்களின் உதவியால் மட்டுமே எழுந்து நிற்க வேண்டும். இதில் ஓரளவுக்கு சாண்டி தாக்குப்பிடித்து எழுவது போல் மூன்றாவது புரமோ வீடியோவில் தெரிகிறது. இருப்பினும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று தலைவர் பதவியை பிடிப்பது யார்? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்

கவின், முகின், சாண்டி ஆகிய மூவரில் கவின் மட்டுமே இன்னும் தலைவர் பதவியை பிடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டாஸ்க்கிலாவது வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சுபஸ்ரீ உயிரிழந்தது விதி: பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு!

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்தால் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த மரணத்திற்கு பேனர் வைத்ததே காரணம்

'பிகில்' படத்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள்

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் அவர்களின் இசையமைப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது.

தனுஷின் 'அசுரன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில்

விஜய் பேச்சுக்கெல்லாம் அதிமுக அஞ்சாது: அமைச்சர் ஜெயகுமார்

சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய ஒரு 15 நிமிட பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேரன் வெளியேறியதால் கடுப்பான கஸ்தூரி: 

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஷெரின் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் நேற்று ஷெரின் முதல் நபராக காப்பாற்றப்பட்டது