மதுமிதா மீது போலீஸ் புகார்: விஜய் டிவி அதிரடியால் பரபரப்பு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா சமீபத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் காவிரி பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு ஷெரின் உள்பட சக போட்டியாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது

இதனையடுத்து பிக்பாஸ் விதியின் படி மதுமிதா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மதுமிதா ஒருசில ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும், அதில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் விஜய் டிவி நிர்வாகம் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதா மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் குறித்து விரைவில் போலீசார் மதுமிதாவை விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது