என்ன ஆச்சு வனிதாவுக்கு? பள்ளி டாஸ்க்கில் திணறல்

பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடந்து வரும் பள்ளி டாஸ்க் பார்வையாளர்களை கொடுமைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கஸ்தூரியின் டீச்சர் கெட்டப்பும் அவரது செயல்பாடுகளும் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அதிருப்தியாக உள்ளது. இந்த நிலையில் இன்றும் பள்ளி டாஸ்க் தொடர்கிறது.

இந்த டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி மட்டுமே ஓரளவு சோபித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் பள்ளி மாணவர்கள் ஒரு பாடலை பாடுகின்றனர். தமிழ் சரியாக தெரியாத ஷெரின் 'சேத்துக்குள்ள சின்னப்புள்ள தத்திதத்தி சிக்கிகிச்சு' என்று சரியாக பாடியது ஆச்சரியத்தை அளித்தது. அதேபோல் லாஸ்லியா, 'கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன' என்று கூறி அசத்தினார்.

இந்த நிலையில் வனிதாவின் முறை வரும்போது அவர் எதையும் கூறாமல் அமைதியாக இருந்தார். இதுகுறித்து சேரன் கேள்வி எழுப்ப, அதற்கு வனிதா டென்ஷனாக இருப்பதாக தெரிவித்தார். உண்மையில் டென்ஷன் ஆனாரா? அல்லது டாஸ்க்கிற்காக குழந்தை போல் நடிக்கின்றாரா? என்று தெரியவில்லை. மொத்தத்தில் இந்த பள்ளி டாஸ்க் எப்போது முடியும் என்றே அனைவரும் காத்திருக்கின்றனர்.

More News

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நடிகை

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

டைட்டிலை லீக் செய்த நாயகி மீது கடுங்கோபத்தில் கார்த்தி படக்குழுவினர்

ஒரு படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், ஆகியவற்றை அந்த படத்தின் குழுவினர் சஸ்பென்ஸ் வைத்து ஒரு சரியான தேதியில் வெளியிடுவதே தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது.

சரித்திரம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்: சயிர நரசிம்மரெட்டி டீசர் விமர்சனம்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு இணையாக இன்னொரு திரைப்படம் இந்தியாவில் வருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில்

சென்னையை நோக்கி வரும் சிவப்பு தக்காளிகள்: கனமழைக்கு வாய்ப்பு என வெதர்மேன் தகவல்

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வறட்சி தாண்டவமாகி தண்ணீர் கஷ்டம் ஏற்பட்ட நிலையில் வருணபகவான்

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'மாயா' இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் 'இறவைக்காலம்'