வனிதாவின் உண்மை முகம்: அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவின் அடாவடிகள் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சலடைய செய்து வருகின்றது. அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது, டாமினேட் செய்வது, மற்றவர்களை கருத்தை காதில் கொண்டு கேட்காமல் தான் சொல்வதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருப்பது ஆகியவை அவருடைய மைனஸ்களாக உள்ளன.

இந்த நிலையில் வனிதாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வலம்வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் குழந்தையை அவரிடம் இருந்து பெற விஜய்குமார் முயல்வதும், பெற்ற தந்தை என்றும், பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல் வனிதாவின் மோசமான செயல்பாடுகள் அந்த வீடியோவில் உள்ளது. வனிதாவின் குழந்தையே தனது தாயிடம் போக விருப்பமின்றி அழுவதும், அந்த குழந்தையை வனிதாவிடம் இருந்து காப்பாற்ற விஜய்குமார் எடுக்கும் முயற்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது.

பெற்ற தந்தையிடமும், தான் பெற்ற குழந்தையிடமும் இந்த அளவுக்கு மோசமாக நடந்து கொண்டிருக்கும் வனிதாவிடம் மற்றவர்கள் சிக்கினால் என்ன ஆவார்கள் என்பதைத்தான் நாம் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்து கொண்டிருக்கின்றோம்