கவின் -லாஸ்லியாவை அடிக்க கை ஓங்கும் வனிதா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கிராமத்து டாஸ்க் என்றாலே சர்ச்சைகளும் கூடவே கலந்து விடும் என்பது முந்தைய வரலாறு. டாஸ்க் என்ற பெயரில் சொந்த விருப்பு வெறுப்பையும் போட்டியாளர்கள் அதில் காண்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவின், லாஸ்லியா காதலை கொஞ்சமும் விரும்பாத சேரன் மற்றும் வனிதா இந்த டாஸ்க்கை பயன்படுத்தி இருவரையும் வச்சு செய்வது போல் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது.
கவினை அடிக்க கை ஓங்குவதும், லாஸ்லியா காதை பிடித்து திருகுவதுமாக உள்ள வனிதா, இந்த காதல் விஷயம் வெளியே தெரிந்தால் ஊரே சந்தி சிரித்துவிடும் என்றும் வரும் சனிக்கிழமை பேசி முடிவு செய்துவிடணும் என்றும் கூறுகிறார். அதற்கு சேரன், 'பேசாம மாப்பிளையை மூணு வருசம் வெளிநாடு அனுப்பிவிடுவோம், வந்தபின்னால் எல்லாம் பாத்துகிடலாம்' என்று கூறுகிறார்
மேலும் சனிக்கிழமை கமல்கிட்ட சொல்லி கவினை கூட்டிட்டு போக சொல்லணும் என்று வனிதா கூறுவது இந்த வாரம் கவினை எவிக்சனில் வெளியேற்ற வேண்டும் என்று அர்த்தத்தில் கூறுவது போல் தெரிகிறது. மொத்ததில் இன்றைய நிகழ்ச்சி ரசிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
#Day65 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/LCKJ801wJB
— Vijay Television (@vijaytelevision) August 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout