இது என்ன கிழக்கு சீமையிலே படமா? வீட்டுக்கு போங்க: ஹவுஸ்மேட்ஸ்களை வெளுத்து வாங்கும் வனிதா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டே வாரங்கள் இருந்த வனிதா, அனைத்து போட்டியாளர்களையும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டு சென்ற நிலையில் தற்போது மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார்.
தற்போது யாரிடமும் வனிதா சண்டை போடவில்லை என்றாலும் ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்கள் எப்படி விளையாட வேண்டும் என்று இதுவரை கமல் கூட சொல்லாத அறிவுரைகளை கூறி வருகிறார்.
நேற்று பிக்பாஸ் போட்டியில் முதல் மூன்று டாப் போட்டியாளர்கள் யார்? என்பது குறித்து கமல் கேட்டபோது பெரும்பாலானோர் தர்ஷனை தேர்வு செய்தனர். இதற்கு வெளுத்து வாங்கிய வனிதா, இவர்கள் போட்ட பிச்சைதான் உனக்கு வேண்டுமா? என்று தர்ஷனை கேள்வி எழுப்பினார். மேலும் இது 'சிம்பத்தி ஷோ இல்லை என்றும், மிஸ்டர் மெட்ராஸ் போட்டி இல்லை என்றும், அக்கா, அண்ணன் எல்லாம் ஒரு மரியாதைக்கு கூப்பிடுவது தான். அண்ணா என்பதற்காக விட்டுக்கொடுத்து போவதற்கு இது என்ன கிழக்கு சீமையிலேயே படமா? என்று கேள்வி எழுப்புகிறார் வனிதா.
இந்த போட்டியில் கொஞ்சம் சுயநலத்துடன் தான் இருக்க வேண்டும். அப்பா, மகள் என விட்டுக்கொடுப்பதாக இருந்தால் வீட்டுக்கு போங்க' என சேரன், லாஸ்லியாவையும் ஒரு வாங்கு வாங்குகிறார்.
வனிதாவின் அறிவுரைக்கு பின் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இனிமேல் கடுமையான போட்டியுடன் சுயநலத்துடன் வெற்றியை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படி ஒரு போட்டியாளரை தெரியாத்தனமாக வெளியேற்றிவிட்டோமே என பல பார்வையாளர்கள் தற்போது மனதிற்குள் நினைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Day50 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/rUacDNzyAy
— Vijay Television (@vijaytelevision) August 12, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments