ஸ்கெட்ச் போடும் வனிதா கேங்: சமாளிக்குமா கவின் கேங்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வந்தபின்னர் இரண்டு கேங் பிரிந்தது என்பது தெரிந்ததே. வனிதாவையும் கஸ்தூரியையும் டார்கெட் செய்ய கவின் தலைமையில் ஒரு கேங் உருவாகியது. அதில் தர்ஷன், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகின் உள்ளனர். வனிதாவுக்கும், கஸ்தூரிக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆகாது என்றாலும் கவின் கேங்கை எதிர்க்க வேறு வழியில்லாமல் இருவரும் ஒரே கேங்கில் உள்ளனர்.
இந்த நிலையில் வனிதாவின் கேங்கில் இணைந்து கொள்ளும் சேரன், கவின் கேங்கை உடைக்க ஸ்கெட்ச் போடுகிறார். கவின் கேங்கை உடைக்க வேண்டும் என்றும், அதற்கு முதலில் அந்த கேங்கின் முதுகெலும்பை உடைக்க வேண்டும் என்றும் சேரனும் வனிதாவும் ஸ்கெட்ச் போடுகின்றனர். ஆனால் கஸ்தூரியோ முதுகெலும்பை முதலிலேயே உடைக்க முடியாது, முதலில் வீக் ஆனவர்களை பிரிக்க வேண்டும் என்று ஐடியா சொல்கிறார். வனிதா, சேரன், கஸ்தூரின் ஸ்கெட்சை கவின் கேங் சமாளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
என்னதான் வனிதா கேங் ஸ்கெட்ச் போட்டாலும் முடிவு பார்வையாளர்கள் கையில் உள்ளது. வனிதா எத்தனை முறை வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தாலும் அவரை வெளியே அனுப்ப பார்வையாளர்கள் தயாராக இருக்கின்றனர். இந்த வாரம் வனிதா நாமினேஷனில் இல்லாததால் தப்பித்தார். இருப்பினும் சேரன் அல்லது கஸ்தூரி ஆகிய இருவரில் ஒருவரை இந்த வாரம் பார்வையாளர்கள் வெளியேற்றி ஸ்கெட்ச் போடுவதில் தாங்கள்தான் வல்லவர்கள் என்பதை நிருபிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments