பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஷெரின் அல்லது வனிதா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்ற கருத்து நிலவி வந்தது

கவின், தர்ஷன், சாண்டி, ஷெரின், மற்றும் வனிதா ஆகிய ஐவர் எவிக்சன் பட்டியலில் இருந்த நிலையில் கவின், தர்ஷன், மற்றும் சாண்டி ஆகியோர் வழக்கம்போல் அதிக வாக்குகளை பெற்று எவிக்சனில் இருந்து தப்பித்தனர்

இந்த நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது ஷெரினா? அல்லது வனிதாவா? என்ற கேள்வி எழுந்த நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற வனிதா சற்றுமுன் வெளியிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட ஒரு போட்டியாளர் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை முதல்முறையாக பெற்ற வனிதா, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் மீண்டும் ஒருமுறை வெளியேற்றப்பட்டார். வனிதா தன்னுடைய ஆட்டத்தை ஆடாமல் அடுத்தவர்களின் ஆட்டத்தை மட்டுமே ஆடியதே அவர் மீண்டும் வெளியேற காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

இனிவரும் நாட்களில் கவின், தர்ஷன், சாண்டி, முகின், சேரன், ஷெரின் மற்றும் லாஸ்லியா ஆகிய ஆறு பேருமே கடினமான போட்டியாளர்கள் என்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்படுகிறது

More News

சிபிராஜ் அடுத்த படத்தில் பிக்பாஸ் டைட்டில் வென்ற நடிகை

நடிகர் சத்யராஜ் நடித்த 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான நிலையில் தற்போது அவரது மகன் சிபிராஜ் 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

என்னை விட சிறப்பாக செய்தவர்: லாஸ்லியா தந்தைக்கு கமல் பாராட்டு

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து நிகழ்ச்சியை நெகிழ்ச்சியாக ஆக்கிவிட்டனர். மற்ற போட்டியாளர்களின்

ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்: 'நம்ம வீட்டுப்பிள்ளை' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'நம்ம வீட்டுப்பிள்ளை' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

செமையா இருக்கு கண்ணா! இளம் இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இளம் கலைஞர்களை ஊக்குவிப்பார் என்பதும், அவர்களது படங்களை பார்த்து பாராட்டுவார் என்பதும்

பேனர் கலாச்சாரம்: அஜித் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி

பேனர் கலாச்சாரம் என்றாலே அனைவரும் அரசியல்வாதிகளை மட்டுமே குறை சொல்லி கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகளுக்கு இணையாக மாஸ் நடிகர்களுக்கு