பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஷெரின் அல்லது வனிதா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்ற கருத்து நிலவி வந்தது
கவின், தர்ஷன், சாண்டி, ஷெரின், மற்றும் வனிதா ஆகிய ஐவர் எவிக்சன் பட்டியலில் இருந்த நிலையில் கவின், தர்ஷன், மற்றும் சாண்டி ஆகியோர் வழக்கம்போல் அதிக வாக்குகளை பெற்று எவிக்சனில் இருந்து தப்பித்தனர்
இந்த நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது ஷெரினா? அல்லது வனிதாவா? என்ற கேள்வி எழுந்த நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற வனிதா சற்றுமுன் வெளியிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட ஒரு போட்டியாளர் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை முதல்முறையாக பெற்ற வனிதா, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் மீண்டும் ஒருமுறை வெளியேற்றப்பட்டார். வனிதா தன்னுடைய ஆட்டத்தை ஆடாமல் அடுத்தவர்களின் ஆட்டத்தை மட்டுமே ஆடியதே அவர் மீண்டும் வெளியேற காரணம் என்பது குறிப்பிடத்தக்கது
இனிவரும் நாட்களில் கவின், தர்ஷன், சாண்டி, முகின், சேரன், ஷெரின் மற்றும் லாஸ்லியா ஆகிய ஆறு பேருமே கடினமான போட்டியாளர்கள் என்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com