தன் வினை தன்னைச்சுடும்: அபிராமியை வறுத்தெடுத்த வனிதா!

பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கும் மீராமிதுனுக்கும் பிரச்சனை ஏற்பட காரணமே அபிராமிதான். கேப்டனாக இருந்த வனிதாவிடம் அபிராமி கூறிய புகாரினால்தான் வனிதாவுக்கும் மீராவுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.

ஆனால் நேற்று திடீரென வனிதாவுடன் மீரா சமாதனம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து மதுமிதாவை கார்னர் செய்தனர். நேற்றைய கமல் கூறிய எவிக்சனிலும் இருவருமே மதுமிதாவை எதிர்த்து ஓட்டளித்தனர். ஆனால் அபிராமியோ, மீராவுக்கு எதிராக ஓட்டு போட்டார். இதனால் வனிதா அதிர்ச்சி அடைந்தார். நேற்றே இந்த விஷயம் புகைந்தது

இந்த நிலையில் இன்று இதுதொடர்பாக வனிதாவுக்கும் அபிராமிக்கும் மோதல் ஏற்பட்டது. 'நீ திடீர்ன்னு நல்லவள் ஆயிட்டியா? என்ன விளையாடிறியா? என்று வனிதா கேட்க, இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி, தனியாக சென்று 'என்னை விட்டுவிடுங்கள் நான் வீட்டுக்கு போகணும் என கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அபிராமி ஆரம்பித்து வைத்த பிரச்சனை தற்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. இதைத்தான் தன்வினை தன்னைச்சுடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்களோ?

More News

'கடாரம் கொண்டான்' படத்தின் கேரக்டர்கள் பெயர்கள் இதோ!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில்

விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த தோல்வி: வைரலாகும் வீடியோ

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்களால் 'பாட்டில்கேப் சேலஞ்ச் வைரலாகி வருவது தெரிந்ததே. ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம், பாலிவுட் நடிகர் அக்சயகுமார்

நயன்தாராவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்', தளபதி விஜய்யின் 'பிகில்', மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்மரெட்டி' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மதுமிதாவை காப்பாற்றிய மக்கள்: அதிர்ச்சியில் ஓட்டு போட்ட 8 பேர்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதாவை வெளியேற்ற கமல்ஹாசன் முன்னிலையில் எட்டு பேர் ஓட்டு போட்ட நிலையில் மக்கள் மதுமிதாவை காப்பாற்றிவிட்டதால் ஓட்டு போட்ட எட்டு பேர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிக்பாஸ் 3: மக்களின் ஆதரவு உண்மையில் யாருக்கு உள்ளது? 

பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கியபோது நிகழ்ச்சியை கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால் போட்டியாளர்களில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது புரிந்திருக்கும்.