ஒட்டுமொத்த உலகத்திலேயே அவங்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம்: கவின்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு யார் மணி கட்டுவது என இத்தனை வாரங்களாக தவித்து கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக கவின் துணிந்து வனிதாவை எதிர்த்து வருகிறார். கவினின் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வனிதா திணறுவதை கடந்த இரண்டு நாட்களில் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் ஷெரின் மற்றும் சாக்சி வனிதா குருப்பில் சேர்ந்தது அந்த அணிக்கு மேலும் வலுவை அதிகரித்துள்ளது. ஆனால் வனிதா குரூப்பில் சேர்ந்த அபிராமி, சாக்சி, மதுமிதா ஆகியோர் வெளியே சென்றது போல் ஷெரினும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பது தெரிகிறது

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் லாஸ்லியாவிடம் வனிதாவும் ஷெரினும் மோதுகின்றனர். லாஸ்லியாவின் நடவடிக்கை தனக்கு பிடிக்கவில்லை என ஷெரின் கூற வழக்கம்போல் மற்றவர்களை பேச முடியாமல் வனிதா தான் மட்டுமே பேசி வருகிறார்.

இந்த நிலையில் லாஸ்லியாவை தனியாக அழைத்து வரும் கவின், 'இந்த உலகத்திலேயே அவங்களுக்கு ஒரு நியாயம் மற்றவங்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் மட்டும் அது மாறிவிடுமா? என கூறி சமாதானப்படுத்துகிறார். தற்போது கவின், வனிதா என இரு அணிகளும் சரிசமமான பலத்தில் இருப்பதால் இனிவரும் நாட்கள் பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது