மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் சரவணன்

ஒவ்வொரு நாளும் ஒருவரை டார்கெட் செய்து வரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் நேற்று சேரனை வம்புக்கு இழுத்த நிலையில் இன்று அவரது குறி மதுமிதாவை நோக்கி திரும்பியுள்ளது

கடந்த சில நாட்களாக மதுமிதா வீட்டில் இருக்கின்றாரா? இல்லையா? என்று கூட தெரியாத அளவுக்கு அநியாயத்திற்கு அமைதியாக இருக்கின்றார். கமல் தோன்றிய இரண்டு நாட்களில் கூட மதுமிதா எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் இந்த வார கிராமத்து டாஸ்க்கில் மதுமிதாவுக்கு நாட்டாமை கேரக்டர் கொடுக்கப்பட்டிருப்பதால் கொஞ்சம் அதிகமாகவே பேசி வருகிறார்.

மதுமிதா தனது கேரக்டரின் மூலம் பிறரை கவர்கிறார் என்று தெரிந்தவுடன் அவரை குறி வைத்த மீரா, இன்று அவருடன் மோதுவது போல் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளது. மதுமிதாவும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார். எப்படி நீங்க சோறு சாப்பிடிறீங்கன்னு நான் பார்த்துடறேன் என்று மீரா சொல்ல, 'அதற்கு மதிக்காதவளுக்கே இவ்வளவு ஆணவம் இருக்கும்போது ஊரையே மதிக்கிற எனக்கு எவ்வளவு ஆணவம் இருக்கும்' என்று மீராவின் உண்மை கேரக்டரை மதுமிதா சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் நான் சொல்றேன் எல்லாரும் சாப்பிடலாம், நாட்டாமை கன்னத்தில் ஒருமுத்தம் கொடுத்துவிட்டு எல்லோரும் சாப்பிடலாம் என்று கூற இதுதான் வாய்ப்பு என்று சரவணன், மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்க அதிர்ச்சி அடைகிறார் மதுமிதா. மொத்தத்தில் இன்று மதுமிதாவின் நாள் போல் தெரிவதால் பிக்பாஸ் வீடு கலகலப்பாகவும், மீராவுக்கு பதிலடியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.