பிக்பாஸ் எவிக்சன்.. ஆபத்தான நிலையில் 3 பெண் போட்டியாளர்கள்..!

  • IndiaGlitz, [Friday,October 20 2023]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இந்த வாரம் நிக்சன், அக்சயா, மணி, விசித்ரா, ஐஷு, விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா, விக்ரம், பிரதீப் ஆகியோர் நாமினேஷனில் சிக்கியுள்ள நிலையில் இவர்களில் வெளியேறும் போட்டியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் அதிக வாக்குகள் பெற்று பிரதீப் முதலிடத்தில் உள்ளார். எனவே அவர் இந்த வாரம் முதல் நபராக சேவ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப்பை அடுத்து மணி சந்திரா, விசித்ரா, விக்ரம் ஆகியோர் உள்ளனர். டேஞ்சர் ஜோனில் வெளியேற்றப்படும் நிலையில் 3 பெண் போட்டியாளர்கள் உள்ளனர். அவர்கள் மாயா, வினுஷா மற்றும் அக்ஷயா. இந்த மூவருக்கும் இடையே மிக குறைந்த வாக்கு வித்தியாசம் இருப்பதால் இவர்களில் யார் வேண்டுமானாலும் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மொத்தத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷன் ஆவது இந்த மூவரில் ஒருவர் தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.