'கேம் இனிமேல் தான் ஆரம்பம்: ஹவுஸ்மேட்ஸ்களை வெளுத்து வாங்கிய வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்ன? இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இந்த நிகழ்ச்சியால் மக்கள் தெரிந்து கொள்வது என்ன? என்பது தெரியாமலேயே இதுவொரு விளையாட்டு ஷோ என நினைத்து இதுவரை ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வந்தனர். வனிதாவின் ரீஎண்ட்ரிக்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் பெரும் மாறுதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதையும் ஓப்பனாக வெளிப்படையாக அதே நேரத்தில் போல்டாக பேசும் வனிதா, சேரன் உள்பட யாரையும் விட்டுவைக்கவிலை. அப்பா, மகள் பாசம் வேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியே போய் பாசத்தை காமியுங்கள். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை சுயநலத்துடனும் போட்டி, பொறாமையுடனும் இருக்க வேண்டும். ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருக்க வேண்டும். அப்பா, மகள், அண்ணன், தங்கை, காதல் எல்லாம் வெளியே வைத்து கொள்ளுங்கள்' என்று வெளுத்து வாங்கினார்.

மேலும் ஷெரினிடம் 'உன்னை யார் புகழ்கின்றார்களோ அவர்கள் தான் உனது முதல் எதிரி என்றும், உனக்கு எதிர்ப்பு இருக்கும் வரை பிரச்சனை இல்லை ஆனால், உன்னை பாராட்ட தொடங்கிவிட்டால் நீ ஆபத்தை நெருங்கிவிட்டாய் என்று வனிதா கூறியது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொருவருக்குமான பாடமாக இருந்தது.

மற்றவர்கள் போட்ட பிச்சையா உனக்கு வேண்டும்? நீ கஷ்டப்பட்டு ஜெயிச்சு டைட்டில் பட்டம் வாங்கணும். அப்பத்தான் உனக்கு பெருமை! என்று தர்ஷனுக்கு அறிவுரை கூறுவதில் ஆகட்டும், முகன் - அபிராமி காதலில் முகன் மீதுள்ள தவறை சுட்டிக்காட்டுவதில் ஆகட்டும், பெண்ணின் கண்ணீருக்கு மதிப்பில்லாமல் செய்துவிடாதே என அபிராமியை கண்டிப்பதில் ஆகட்டும், லாஸ்லியாவை ஃபிராடு என்று கூறுவதில் ஆகட்டும் நேற்றைய வனிதாவின் கால்மணி நேர பேச்சு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாக அமைந்தது. இப்படிப்பட்ட ஒரு போட்டியாளரை பார்வையாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியது வனிதாவுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. பார்வையாளர்களுக்கே மிகப்பெரிய நஷ்டம் என்பது இப்போது புரிய வருகிறது.

More News

'நேர் கொண்ட பார்வை' படம் குறித்து வனிதா பேசிய வசனங்கள்

பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தாளியாக வந்துள்ள வனிதா, ஒவ்வொரு போட்டியாளரையும் கன்னத்தில் அறைவது போல் கேள்வி கேட்டு வரும் நிலையில்

தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இரு! அபிராமிக்கு வனிதாவின் அறிவுரை

பிக்பாஸ் வீட்டில் வனிதா நேற்று வந்தபின்னர் தான், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தான் எதற்காக இங்கு வந்தோம், ஆனால் என்ன தவறு செய்து கொண்டிருக்கின்றோம் என்பது புரிந்தது

'நேர் கொண்ட பார்வை' படத்தை பார்த்த ரஜினிகாந்த்: தல அஜித்துக்கு பாராட்டு!

தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டு பிள்ளை' செகண்ட்லுக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளிவந்தது.

கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்!

கடந்த ஆண்டு 'நடிகையர் திலகம்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'சீமராஜா', 'சாமி 2',  'சண்டக்கோழி 2', 'சர்கார்' என ஆறு தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிவடையும்