என்ன நியாயமா விளையாடிறீங்க எல்லோரும்? கவின் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளில் இருந்து காதல், காதல் காதல் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற அளவில் விளையாடிக் கொண்டிருந்த கவின், தற்போது கடந்த 2 நாட்களாக போட்டியை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக விளையாடி வருகின்றார். குறிப்பாக டாஸ்குகளில் அவர் காட்டும் ஆர்வம் மற்ற போட்டியாளர்களை வியக்க வைக்கிறது
இந்த நிலையில் இன்று நடத்தப்படும் ஒரு டாஸ்க்கில் ஏற்கனவே சாண்டியிடம் மோதிய கவின், தற்போது ஷெரினுடன் மோதுகிறார். இன்றைய டாஸ்க்கின் போது இடையில் திடீரென டாஸ்க்கை நிறுத்திவிட்டு லாஸ்லியாவுடன் கவின் பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான ஷெரின், ‘நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமா? விளையாட விருப்பம் இல்லை என்றால் விளையாடாமல் இருக்கலாமே என்று கூறினார்
அதற்கு பதில் அளித்த கவின், எல்லோரும் என்ன நியாயமா விளையாடிறீங்க’ என்று கேள்வி எழுப்ப இதனால் ஆத்திரமடையும் ஷெரின் டாஸ்க்கில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு ஆத்திரத்துடன் செல்கிறார். கவின் இதுவரை நெருங்கி பழகியவர்களுடன் கோபப்பட்டதே இல்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கவின், திடீரென பழகியவர்கள் மீதே கோபம் கொள்வது அவரது உண்மையான கேரக்டர் வெளிப்படுகிறதா? என்ற கேள்வியை எழ வைக்கின்றது
#Day88 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/iWB8YZPt3g
— Vijay Television (@vijaytelevision) September 19, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments