உனக்கு மட்டுமா பிரேக்-அப்? அவளுக்கும் ஆகும்! சாக்சிக்கு ஆறுதல் சொல்லும் தோழிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று நடைபெற்ற மொட்டை கடிதம் டாஸ்க்கில் சாக்சியுடன் கூடிய உறவு குறித்து விளக்கம் அளித்த கவின், சாக்சிக்கும் எனக்கும் எந்தவிதமான உறவும் இப்போதைக்கு இல்லை, வெறும் நட்பு மட்டுமே என்று கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்து மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் சாக்சிக்கு அவரது நெருங்கிய தோழிகளான ரேஷ்மா, ஷெரின் ஆகிய இருவரும் ஆறுதல் கூறுகின்றனர்.
அதான் ஓப்பனா சொல்லிட்டானே பிரேக் அப்ன்னு, அப்புறம் அழுது கொண்டிருப்பதால் என்ன பயன்? என்று ரேஷ்மா கூற அதற்கு ஷெரின், இதைப்பத்தியே நீ யோசித்து கொண்டிருந்தால் அது உன்னையே சாப்பிட்டுவிடும். எனவே அதிலிருந்து வெளியே வா என்று கூறுகிறார்.
அப்போது சாக்சி, 'பிரேக் அப் உனக்கு மட்டும் ஆகுறது இல்லை எல்லாருக்கும் ஆகும், அவளுக்கும் ஒருநாள் பிரேக் அப் ஆகும் என்று கூறிவிட்டு 'நாளை முதல் புதுதினம், இனி வரப்போவதை பத்திதான் யோசிக்கணும்' என்று ஆறுதல் கூறுகின்றார்.
கவின் - சாக்சி காதல் முடிவுக்கு வந்ததை அடுத்து இனிவரும் நாட்களில் இருவரும் வீட்டில் இருந்தால் பிரச்சனைகள் அதிகமாகும் என்றே தெரிகிறது. இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறினால் பிரச்சனைகள் குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
#Day38 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/TpMqDZIGOi
— Vijay Television (@vijaytelevision) July 31, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments