கவின் செய்தால் தவறு, ஷெரின் செய்தால் சரியா?

இந்தவார நாமினேஷனில் சேரன் மட்டும் ஷெரின் ஆகிய இருவரை கவின் நாமினேட் செய்தார். ஷெரினுக்கு இந்த போட்டியில் வெல்ல அனைத்து தகுதிகளும் உள்ளது என்றாலும் தன்னுடைய நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதால்தான் அவரை நாமினேட் செய்வதாக கவின் காரணம் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஷெரின் கவினிடம் நியாயம் கேட்கிறார். உனக்கு மிகவும் உறுதுணையாகவும் நட்பாகவும் ஆரம்பத்திலிருந்து நான் தான் இருக்கின்றேன். அப்படி இருக்கும்போது என்னை ஏன் நாமினேட் செய்தாய்? என்று கேட்க, அதற்கு கவின், ‘என்னுடைய நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நான் உன்னை நாமினேட் செய்தேன் என்று கூறுகிறார். இதற்கு ஷெரின் எதிர்ப்பு தெரிவிக்கிறார். என்னிடம் குறை இருந்தால் நாமினேட் செய்வது தவறில்லை. ஆனால் நண்பர்களுக்காக நாமினேட் செய்தது தவறு என்று அவர் வாதாடுகிறார். ஆனால் இதே ஷெரின் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சாக்ஸி தனது தோழி என்றும் அதனால் அவரைத் என்னால் நாமினேட் செய்ய முடியாது என்றும் கன்ஃபக்சன் அறையில் கூறுகிறார். ஷெரின் செய்தால் தவறு இல்லை, கவின் செய்தால் மட்டும் தவறா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேபோல் பிக்பாஸ் என்பது ஒரு கேம், இதில் யாரும் யாருக்கும் சப்போர்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை, ஒவ்வொருவரும் தாங்கள் ஜெயிப்பதற்காக விளையாட வேண்டும் என வனிதா அனைவரிடமும் கூறி வருகிறார். ஆனால் அதே வனிதா, சேரன் ஜெயித்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சேரன் வெற்றி பெறவேண்டும் என்று வனிதா கூறுவது மட்டும் நியாயம், அதையே கவின் கூறினால் மட்டும் ஏன் வனிதா சண்டைக்கு செல்கிறார் எனவும் நெட்டிசன்கள் இதுகுறித்த வீடியோக்களை வெளியிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் கவின் செய்தால் மட்டும் தவறு, மற்றவர்கள் செய்தால் நியாயம் என்ற ரீதியிலேயே சென்று கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.