நிகழ்ச்சி முடிவடையும் நேரத்திலும் வனிதாவை கலாய்க்கும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது முகின், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகின் ஆகிய நால்வர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட்டு நாளை மூவர் இறுதிப்போட்டிக்கு செல்லவுள்ளனர்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோ ஒன்றில் ‘தற்போது உள்ள நால்வர் இல்லாமல் இந்த போட்டியில் வேறு சிலர் ஃபைனலுக்கு தகுதி பெற்றிருந்தால் அவர்கள் என்ன பேசியிருப்பார்கள்? என்ற ஒரு கற்பனையில் முதலில் சாண்டி, வனிதா மாதிரி பேசுகிறார்

‘சார் எனக்கு கத்தி பேசவே தெரியாது. இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சண்டை போட்டதே இல்லை. இந்த வீட்டில் நான் தான் சமாதானப்புறா. சமாதானப்புறாவுக்கு இன்னொரு பேர் வனிதான்னு எல்லோரும் சொல்வாங்க’ என்று கலாய்க்க கமல் உள்பட அனைவரும் இதனை ரசிக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ள கடைசி நேரத்திலும் எந்தவித டென்ஷனும் இல்லாமல் வழக்கம் போல் ஜாலியாக இருக்கும் சாண்டி, டைட்டிலை வெல்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்

More News

இது டிரைலர்தான் மெயின் பிக்சர் இனிமேல்தான்: மதுமிதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, திடீரென தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பேனர் விவகாரம்: சூர்யா, தனுஷ் ரசிகர்களை மிஞ்சிய விஜய்சேதுபதி ரசிகர்கள்

பேனர் கலாச்சாரத்தால் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில் இந்த மரணத்திற்கு பின் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகளும், மாஸ் நடிகர்களும் அறிவித்தனர்.

புதிய லுக்குடன் அஜித் சென்றது எங்கே தெரியுமா?

நேற்று சென்னை விமான நிலையத்தில் தல அஜித்தை புதிய இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து அவருடன் செல்பி எடுக்க முண்டியெடுத்தனர்.

மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு: பொங்கி எழும் திரையுலகினர்

மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி கையெழுத்திட்ட விவகாரத்தில் அவர்கள் அனைவர் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் 3 சீசன் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3, டைட்டில் வின்னர் யார் என்பது நாளை இரவு தெரிந்துவிடும். வெற்றியாளரை தேர்வு செய்ய வாக்குகள் பதிவு செய்யப்படுவது நேற்றுடன்