சாண்டியை உணர்ச்சிவசப்பட்டு அழவைத்த பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிவடையும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் மீண்டும் பைனலுக்கு தகுதி பெற்ற நால்வரும் தங்களுடைய குடும்பத்தினர்களுடன் வீடியோகால் மூலம் பேச வைக்கும் வசதியை பிக்பாஸ் ஏற்படுத்தி தந்துள்ளார்.

அந்த வகையில் முதலில் லாஸ்லியா தனது தந்தையுடன் வீடியோகால் மூலம் பேசிய நிலையில் தற்போது சாண்டி தனது மகள் லாலாவுடன் வீடியோகாலில் பேசுகிறார். மகளை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு சாண்டி கண்ணீர்விட, அழுகாதீங்க' என்று லாலா கூறுகிறார். எல்லோரையும் சிரிக்க வைக்கும் சாண்டியை உணர்ச்சிவசப்பட்டு பிக்பாஸ் அழவைத்துவிட்டார்.

இனி அடுத்ததாக முகின் மற்றும் ஷெரினின் உறவினர் வீடியோகால் மூலம் இருவரிடமும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.