வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு: கமல் முன்னிலையில் வனிதாவை கலாய்த்த சாண்டி

பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்காவாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதாவிடம் எல்லோருக்குமே ஒருவித பயம் உள்ளது. ஏன் பிக்பாஸூக்கே பயம் இருக்கும்போல் தெரிகிறது. மைக்கை கழட்டி தூக்கி எறிந்த வனிதாவை இதுவரை பிக்பாஸ் கண்டிக்கவில்லை. கமல்ஹாசனும் வனிதாவை நாகரீகமாகவே அவரது குறையை சுட்டிக்காட்டினார்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அடுத்த புரமோவில் சாண்டியும் கவினும் கமல்ஹாசன் குறித்து ஒரு பாடலை பாடுகின்றனர்.

'உலக நாயகன் வர்றாரு ஒத்திக்கோ ஒத்திக்கோ
வாயை கொஞ்சம் நீயும்தான் பொத்திக்கோ
வாரத்தில ரெண்டு நாளு வருவார்
அவரு வந்தாருன்னா டார் டாரா கிழிப்பாரு

என்று பாடினார். இந்த பாடலில் 'வாயை கொஞ்சம் நீயும் பொத்திக்கோ' என்ற வரிகளின்போதும், 'அவரு வந்தாருன்னா டார் டாரா கிழிப்பாரு' என்ற வரிகளின் வனிதாவின் முகம் வித்தியாசமாக மாறியதையும் கவனிக்க முடிந்தது. தர்ஷன் போல் நேரடியாக வனிதாவிடம் மோதவில்லை என்றாலும் மறைமுகமாக வனிதாவை சாண்டி கலாய்த்தது அதிலும் கமல் முன்னிலையில் கலாய்த்தது பார்வையாளர்களுக்கு குஷியாக இருந்தது