'நான் தான் டைட்டில் வின்னர்', கப்பு எனக்குத்தான்: வனிதாவுக்கு டப்பிங் பேசும் சாண்டி
- IndiaGlitz, [Wednesday,September 04 2019]
பிக்பாஸ் வீட்டில் கவின் தலைமையில் ஒரு குழுவும், வனிதா தலைமையில் ஒரு குழுவும் இயங்கி வரும் நிலையில் வனிதாவின் குழுவில் தற்போது சாக்சி, ஷெரின், மோகன் வைத்யா ஆகியோர் இணைந்துள்ளனர். இருபக்கமும் சம வலிமையில் உறுப்பினர்கள் இருப்பதால் போட்டியும் சண்டையும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் வனிதாவும் அவருடைய குழுவினர்களும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திட்டமிட, அதனை வெளியில் இருந்து பார்த்து வரும் சாண்டி, தனது குழு உறுப்பினர்களுக்கு பின்னணி பேசி அவர்கள் பேசுவதை புரிய வைக்கின்றார். அதில் 'எவ்வளவு பண்ணனுமோ அவ்வளவு பண்ணட்டும், அதை பத்தி எனக்கு கவலையில்லை. ஆனால் நான் தான் டைட்டில் எடுத்துட்டு போவேன். கமல் சாரே சொல்லிட்டாரு எனக்குத்தான் டைட்டில்ன்னு, அவங்க எல்லோருடைய மூக்கை உடைக்கத்தானே வந்தேன். நான் விடவே மாட்டேன், நான் தான் டைட்டில் வின்னர். அவன் யாரு என்னை பத்தி பேசறதுக்கு, நான் தான் டைட்டில் வின்னர், கப்பு எனக்குத்தான்' என வனிதா பேசுவதாக சாண்டி பின்னணி பேசுகிறார். இதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் சிரிக்கின்றனர்.
மொத்தத்தில் ஒரு டென்ஷன் குழுவுக்கும் ஒரு ஜாலியான குழுவுக்கும் இடையே போட்டி நடைபெறுவதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் #Day73 Promo3 ??#KamalHaasan #VijayTelevision #VijayTV #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3 pic.twitter.com/4SCg1Wy4MX
— (ᴋᴏᴘɪᴛʜᴀ)?? (@Kuttymaa_) September 4, 2019