சாண்டியிடம் பார்வையாளர் கேட்ட 'நச்' கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று தொலைபேசி மூலம் போட்டியாளர் ஒருவரிடம் ஒரு பார்வையாளர் கேள்வி கேட்பது இந்த சீசனில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு வழக்கமாகும். அந்த வகையில் இன்று ஒரு பார்வையாளர் சாண்டியிடம் ஒரு கேள்வியை கேட்கின்றார்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் சிரிக்க வைக்கும் சாண்டி, சண்டை என்று வரும்போது அதை விலக்கி வைக்காமல் வேடிக்கை பார்க்கின்றார் அல்லது ஒதுங்கி கொள்கிறார். நியாயத்திற்கு குரல் கொடுக்க வேண்டாமா? என்று கேட்டார். இந்த கேள்விக்கு 'இனிமேல் குரல் கொடுக்கின்றேன்' என்று கூறி சாண்டி சமாளிக்கின்றார்.
ஆனால் கமல் அவரை விடாமல், 'இனிமேல் குரல் கொடுப்பது இருக்கட்டும், இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதுதான் அவருடைய கேள்வி என்று கூற, அதற்கு சாண்டி, 'சண்டை நடக்கும்போது எப்படி அதில் தலையிடுவது என்றே தெரியாமல் இருந்தேன். ஒரே குழப்பமாக இருந்தது' என்று கூற அதை கேட்டு கமல்ஹாசனே சிரித்துவிட்டார்.
எனவே இனிவரும் சண்டைகளை தீர்த்து வைக்க சாண்டி முயல்வார் என தெரிகிறது. சண்டையை தீர்த்து வைக்க முடிவெடுத்தாலே அவரை சனி பிடித்துவிட்டது என்றுதான் அர்த்தம். இதுவரை நாமினேஷனில் சிக்காமல் நல்ல பெயர் எடுத்து வந்த சாண்டி, இனிமேல் என்ன ஆகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com